உதடு வெடிப்பு நீங்க
பனிக்காலங்களில் ஏற்படும் உதடு வெடிப்பு நீங்க கரும்புச் சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதடு வெடிப்பு குணமாகும்.
உதடுகளில் ஏற்பட்ட வெடிப்புகள் நீங்க
2தேக்கரண்டி ரவையுடன் 1 ஸ்பூன் தேனைக் கலந்து உதடுகளில் மசாஜ் செய்தால், உதடுகளில் ஏற்பட்ட வெடிப்புகள் நீங்கும்.
உதடுகளின் சுருக்கங்கள் நீங்க
வாரத்தில் 2, 3 தடவை, உலர்ந்த திராட்சை ஒன்றை எடுத்து, இரு உதடுகளுக்கும் மேலே வைத்து, விரல்களால் அப்படியே மசாஜ் செய்வது போல உருட்டவும். இதனால் உதடுகளின் சுருக்கங்கள் நீங்கும். வயதானாலும் தெரியாது.
உதட்டு கருமை நீங்க
சிகரெட் குடித்து உதடு கருமையாக இருப்பவர்கள் மாதுளைச்சாறு, புதினா இலையை உதட்டில் தடவி வர உதடு செந்நிறமாகும்.
கருத்துகள் இல்லை