தீக்காய தழும்புகள் மறைய
தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்புகளை நீக்க, பாதாம் அல்லது ஆலிவ் ஆயிலை தடவி மசாஜ் செய்ய வேண்டும்.
அதிலும் ஒரு நாளைக்கு இரு முறை தடவி வந்தால், நன்கு பளிச்சென்று தெரியும் தழும்புகள் கூட மங்கிவிடும்.
தழும்புகள் மறைய
தக்காளியில் அதிகமான வைட்டமின்கள் இருப்பதால், அவை சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, தழும்புகளை மறைய வைக்கும்.
அதற்கு தக்காளி துண்டுகளையோ அல்லது அதன் சாற்றையோ பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, தினமும் மசாஜ் செய்து வந்தால் தழும்புகள் போய்விடும்.
சரும வறட்சி அகல
ஒரு முட்டையின் வெள்ளைக் கரு, ஒரு டேபிள்ஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் கற்றாழை ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் அடித்துக்கொள்ளவும்.
இந்தக் கலவையை முகத்தில் பூசி, 20 நிமிடங்கள் ஊறியதும், வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.
இந்த மாஸ்க்கை முகத்தில் பூசுவதால், வறண்ட தன்மை நீங்கி முகத்துக்குப் பொலிவு கிடைக்கும்.
இது சருமத்தில் காணப்படும் அதிகப்படியான வறண்ட தன்மையை உறிஞ்சுவதோடு அழுக்கையும் அகற்றும்.
சருமம் மென்மையாக மாற
இரண்டு டேபிள்ஸ்பூன் தேங்காய்ப்பால், ஒரு டேபிள்ஸ்பூன் பச்சைப் பயறு மற்றும் ஒரு பழுத்த வாழைப்பழம் ஆகியவற்றைச் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துகொள்ளவும்.
பிறகு இந்தக் கலவையை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும்.
நேச்சுரல் மாய்ஸ்ச்சரைசர் தரும் பேக் இது.
சருமம் மிருதுவாகவும், மென்மையாகவும் மாறும்.
சூரியக் கதிர்களால் பாதித்த சருமத்துக்கு மிகவும் நல்லது.
சருமம் புத்துணர்வாக
ஒரு கப் பழுத்த பப்பாளி, ஒரு கப் பழுத்த வாழைப்பழம், ஒரு டேபிள்ஸ்பூன் பால் பவுடர் ஆகியவற்றைத் தண்ணீருடன் சேர்த்து அரைக்கவும்.
இந்த விழுதை முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழித்துத் தண்ணீரால் முகத்தைக் கழுவலாம்.
சருமம் புத்துணர்வாகும். ஈரப்பதத்துடன், மென்மையாகவும் இளமையாகவும் காணப்படும்.
கோடையில் சருமம் கருக்காமல் இருக்க
ஒரு பௌலில் பூசணிக்காய் கூழ் எடுத்து, அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின் அதில் தேன், பாதாம் பால், ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.
இறுதியில் நீரால் முகத்தைக் கழுவி, பின் மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்த வேண்டும்.
தேவையற்ற முடிகளை அகற்ற
சாம்பலை களிமண் அல்லது உளுந்தமாவுடன் கலந்து மறைவிடங்களில் உள்ள முடியை அகற்றுங்கள். இவ்வாறு எடுத்தபின் அந்த இடத்தில் முடி முளைக்காது.
மரு உதிர
அம்மான் பச்சரிசி இலையின் தண்டுப்பாலை தோலின் மேல் படாமல் மருவின் மேல் மட்டும் படும்படி தடவ வேண்டும். இவ்வாறு ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை தடவினால் மரு உதிர்ந்துவிடும்.
சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற
புதினாவில் புத்துணர்ச்சியூட்டும் தன்மை அதிகம் உள்ளது.
மேலும் சருமத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றும் சக்தி உள்ளது.
அதற்கு புதினா இலையை அரைத்து சாறு எடுத்து, அதனை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
அக்குள் முடிகளை அகற்ற
ஒரு பௌலில் மஞ்சள் தூள் மற்றும் பால் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின் அதை அக்குளில் தடவி 20-30 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீரில் நனைத்த துண்டால் அக்குளைத் துடைத்து எடுக்க வேண்டும்.
இந்த சிகிச்சையை அடிக்கடி செய்து வருவதன் மூலம், அக்குளில் உள்ள மயிர்கால்கள் தளர்ந்து, உதிர்ந்துவிடும்.
அக்குள் கருமை நீங்க
ஒரு பௌலில் 1 ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதை நன்கு கலந்து பேஸ்ட் செய்து, அக்குளில் தடவி சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.
15 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரால் அக்குளைக் கழுவ வேண்டும்.
இந்த முறையை வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தி வருவதன் மூலம், அக்குள் கருமை நீங்கி அக்குள் வெள்ளையாகி விடும்.
கருத்துகள் இல்லை