முக சுருக்கம் மாற
தயிருடன் கடலை மாவு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வ தால் முகத்தில் ஏற்படும் சுருக்கம் மறையும்.
அல்லது
முக சுருக்கங்கள் மறைய
சாத்துக்குடி சாறில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்திற்கு நல்ல திக் ஆக பூசி 20 நிமிடம் கழித்து அலம்பி விடவும். கொஞ்ச நாள் இப்படி செய்தால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறையும்.
அல்லது
சுருக்கங்களைப் போக்க
முகத்திலுள்ள சுருக்கங்களைப் போக்க, ஒரு ஸ்பூன் தேனில், காரட் ஜூஸை கலந்து முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் தடவி, 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவவும்.
இது போன்ற மேலும் பல அழகு குறிப்புகளை உங்களது மொபைலில் நீங்களும் பெற இங்கே கிளிக் செய்து நித்ரா அழகு குறிப்புகள் செயலியை டவுன்லோடு செய்துகொள்ளுங்கள்.
அல்லது
முகச் சுருக்கம் நீங்க
வெங்காயம் சிறந்த கிருமிநாசினியாகும். முகத்தில் ஆங்காங்கே இருக்கும் நிற மாற்றங்களையும், சிறு சிறு மேடு பள்ளங்களையும் போக்க வெங்காயச் சாறை முகத்தில் தடவி 5 நிமிடங்களுக்கு காயவிட்டு கழுவிக் கொள்ளலாம்.
வெங்காயத்தை மசித்து நாலு சொட்டு தேன் விட்டு ‘பேக்‘ போட்டுக் கொண்டால், முகச் சுருக்கம் நீங்கும்.
கருத்துகள் இல்லை