வறட்டு இருமலில் இருந்து உடனடி நிவாரணம் பெற
இஞ்சி, பட்டை, கிராம்பு போன்ற மருத்துவ பண்புகள் நிறைந்த பொருட்களைக் கொண்டு டீ தயாரித்துக் குடித்தால், தொண்டையில் உள்ள பிரச்சனைகள் நீங்குவதோடு, வறட்டு இருமல் பிரச்சனையும் சரியாகிவிடும்.
அதற்கு ஒரு டம்ளர் கொதிக்கும் நீரில் 1 டீஸ்பூன் இஞ்சி பவுடர், 1 சிட்டிகை பட்டைத் தூள் மற்றும் சிறிது கிராம்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, 5 நிமிடம் கழித்து வடிகட்டி, தினமும் குடியுங்கள்.
அடிநா சதை அழற்சி குணமாக
ஒரு கட்டு நற்பதமான துளசி இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
பின் ஒரு பாத்திரத்தில் 1 டம்ளர் நீரை ஊற்றி கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ளுங்கள். பின்பு அதில் துளசி இலைகளைப் போட்டு, தட்டு கொண்டு 5 நிமிடம் மூடி வையுங்கள்.
அடுத்து அதனை வடிகட்டி, 1 டீஸ்பூன் தேன் கலந்து குடியுங்கள்.
இப்படி ஒரு வாரம் தினமும் குடித்து வந்தால், அடிநா சதை அழற்சி குணமாகும்.
கருத்துகள் இல்லை