தேவையற்ற முடிகளை அகற்ற
நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் 1-2 டீஸ்பூன் ஓட்ஸ் பொடியை சேர்த்து கலந்து, தேவையற்ற முடி வளர்ந்துள்ள பகுதிகளில் தடவி மென்மையாக தேய்த்து, 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.
இந்த முறையை வாரத்திற்கு 2 முறை செய்து வர, முடியின் வளர்ச்சியைத் தடுக்கலாம்.
சருமம் இளமையுடன் காட்சியளிக்க
மிக்ஸியில் சிறிது பப்பாளி, அன்னாசி மற்றும் தர்பூசணி போட்டு நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
அதன் பின் அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 20 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.
இறுதியில் நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இதனால் சருமம் இளமையுடன் காட்சியளிக்கும்.
வெள்ளைத் திட்டுக்கள் மறைய
சிறிது வேப்பிலையை அரைத்து, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, வெள்ளைத் திட்டுக்களின் மீது தடவ வேண்டும். இப்படி தினமும் 2 வேளை செய்தால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
சருமத்தைப் பராமரிக்க
சருமத்திற்கு க்ரீம்கள் மற்றும் லோசன்கள் பயன்படுத்துவதற்கு, பதிலாக தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெயை தடவினால், சருமம் மென்மையாக, ஈரப்பதத்துடன், சுருக்கமின்றி இருக்கும்.
வறட்சி நீங்க
சந்தன பவுடர், பச்சைப் பயறு மாவு, கஸ்தூரி மஞ்சள், கடலை மாவு, முல்தானி மெட்டி பவுடர், ரோஜா இதழ்தூள் இவற்றைக் கலந்துவைத்து, சருமத்தில் தேய்த்துக் குளித்துவர, வறட்சி நீங்கி, தோல் பளபளக்கும்.
அரிப்பு குணமாக
பாத்டப்பில் வெதுவெதுப்பான தண்ணீரை நிரப்பி, அதில் ஒரு டம்ளர் வினிகர் சேர்த்து 15 நிமிடம் உடம்பை ஊறவைத்துக் குளிக்கவும்.
இதனால் அரிப்பு குணமாகும். சருமம் மென்மையாகும்.
கருத்துகள் இல்லை