உதட்டில் பரு நீங்க
ஒரு கிண்ணத்தில் சிறிதளவு மோர் எடுத்துக் கொள்ளவும்.
அதில் ஒரு சிறிய துண்டு பஞ்சை நனைத்து உதட்டின் மேல் பருக்கள் உள்ள இடத்தில் மென்மையாகத் தடவவும்.
சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் உதட்டை கழுவவும். தொடர்ந்து ஒரு நாளில் 3 அல்லது 4 முறை இதனை செய்வதால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
உதடுகள் சிவப்பாக மாற
உதடுகள் சிவப்பாக மாற பீட்ருட் மற்றும் மாதுளம் பழம் மிகவும் உதவியாக இருக்கும். பீட்ரூட் உதடுகளை சிவப்பாக்குவதில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. பீட்ருட் அல்லது மாதுளம் பழத்தின் சாற்றை உதடுகளின் மீது பூசி வந்தால் உதடுகள் மிக விரைவிலேயே கவர்ச்சியாக மாறும்.
உதடு வசீகரமாக
உதடு வசீகரமாக இருக்க முட்டையின் வெண்கரு, பாதாம் பவுடர், பால் இம்மூன்றையும் கலந்து உதட்டில் தடவி அது காய்ந்ததும் சுடுநீரினால் கழுவி விடவும்.
கருத்துகள் இல்லை