பித்த வெடிப்பு நீங்க
பாதத்தில் உள்ள (பித்த வெடிப்பு) வெடிப்பு நீங்க ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய், ஒரு ஸ்பூன் பன்னீர், இரண்டு ஸ்பூன் எலுமிச்சம் சாறு மூன்றையும் கலந்து வெந்நீரில் கால்களை 10 நிமிடங்கள் வைத்து ஊறிய பின் பூசிவர வெடிப்பு நீங்கும்.
பாதங்கள் மென்மையாக
வெதுவெதுப்பான நீரில் உப்பு மற்றும் வாஸ்லின் சேர்த்து கலந்து, பாதங்களை அதில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, குதிகாலை சுத்தம் செய்ய உதவும் பிரஷ் அல்லது படிகக்கல்லை வைத்து ஸ்கரப் செய்து, பின் கழுவ வேண்டும்.
கால் ஆணி மறைய
ஒரு டீஸ்பூன் எருக்க இலைச் சாறுடன் 5 சொட்டு டீ ட்ரீ ஆயில் கலந்து ஆணி உள்ள இடத்தில் தினமும் தடவி வந்தால் கால் ஆணி இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
பாத வெடிப்பு குணமாக
கிளிசரின் 50 மி.லி., கடுகு எண்ணெய் 10 மி.லி., எலுமிச்சை பழச்சாறு 20 சொட்டுக்கள் இவைகளை சேர்த்துக் கலக்கவும். இதை இரு கால்களிலும் தடவி அரை மணி நேரம் கழித்துக் கழுவிவிடலாம்.
குதிகால் வெடிப்பு குணமாக
வெந்தயத்தை ஒரு தேக்கரண்டி அளவு நீரில் ஊற வைத்து அதனுடன் செம்பருத்திப்பூ, மஞ்சள், வேப்பிலைக் கொழுந்து வைத்து அரைத்து குதிகால்களில் தடவிவர கால்களில் உள்ள கீறல், வெடிப்பு மறைந்து குதிகால்கள் அழகாகும்.
கருத்துகள் இல்லை