குதிகாலை மிருதுவாக்க
ஒரு டீ ஸ்பூன் மஞ்சள் தூளுடன், ஒன்றரை டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெயை கலந்துகொள்ள வேண்டும்.
அந்த கலவையை, உங்கள் குதிகாலில் தூங்க செல்லும்முன் தேய்த்துகொள்ள வேண்டும்.
சாக்ஸ் அல்லது ப்ளாஸ்டிக் பேக்கை இருகால்களிலும் அணிந்துகொள்ள வேண்டும்.
இது உங்கள் வெடிப்புற்ற குதிகாலை மிருதுவாக வைத்துகொள்வதோடு மென்மையாகவும் மாற்றுகிறது.
பனிக்கால வெடிப்பு மறைய
தேன், நெய், தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய், மஞ்சள் தூள் ஆகியவற்றைக் கலந்து, பாத வெடிப்புகளில் தடவி வந்தால் பனிக்கால வெடிப்பு மறையும்.
பாத வலி குறைய
இரவில் படுக்கப்போவதற்கு முன்பு சூடு தாங்கும் அளவு வெந்நீர், உப்பு, எலுமிச்சைச்சாறு, பேபி ஷாம்பு போட்டுப் பாதங்களை ஐந்து முதல் பத்து நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்.
பிறகு, பழைய டூத்பிரஷால் பாதத்தை நன்றாக சுத்தம்செய்து, ஈரம் போகத் துடைத்து நல்லெண்ணெயை லேசாக சூடு செய்து காலில் தடவலாம்.
பாத வலி குறைந்து, தூக்கம் தழுவும்.
கருத்துகள் இல்லை