நகங்களை வெட்டும் முன்

                 நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.

நகத்தை பராமரிக்க

                 நக சுத்தி வந்து அழுகிப் போன நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை குங்குமப்பூ, வெண்ணை கலவையானது சீர்படுத்தி இழந்த அழகை மீட்டுத்தரும்.

நகங்களில் கிருமிகள் வராதிருக்க

                  இளஞ்சூடான நீரில் துளசி, புதினா சேர்த்து 10 நிமிடங்கள் விரல்களை வைத்திருக்கவும். இதனால் நகத்தில் கிருமிகள் ஒட்டாது.

நகங்கள் உடையாமலிருக்க

                   ஒரு கப் ஆலிவ் எண்ணெயை, லேசாக சூடாக்கி கைகளை அதில் வைத்து, இரண்டு நிமிடம் நகங்களை மசாஜ் செய்து பஞ்சால் துடைக்கவும்.

பேன் தொல்லை நீங்க

                   மருதாணிப்பூக்களை சுத்தம் செய்து தலயணை உறைக்குள் வைத்து அதன் மீது தலை வைத்துத் தூங்கினால் பேன்கள் தலைமுடியை விட்டு நீங்கி விடும்.

ஈறு மற்றும் பேன் போக

                 தலைக்கு எண்ணெய் தேய்க்கும் போது ஊமத்தை இலை சாற்றை கலந்து தலையில் தேய்த்து கொண்டால் ஈறு மற்றும் பேன் போய்விடும்.

பொடுகு மறைய

                   வேப்பம் பூவை வாட்டி தலையில் கட்டிகொண்டால் பேன், பொடுகு, ஈறு போன்றவைகள் அனைத்தும் போய்விடும்.

பேன் தொல்லை நீங்க

                 வசம்பை தண்ணீர் விட்டு அரைத்துத் தலையில் நன்றாகத் தேய்த்து ஊற விட வேண்டும். பிறகு சாதாரண தண்ணீரில் தலையை நன்றாக அலசிவிடவும்.

வழுக்கை ஏற்படாமல் இருக்க

                 முழு கோதுமை – 1 டீஸ்பூன், தேங்காய்த் துருவல் – 1 டீஸ்பூன், வெள்ளை எள் – 1 டீஸ்பூன் இவை அனைத்தையும் கலந்து தண்ணீர் விட்டு அரைக்கவும்.

                  அதை வடிகட்டி சாறு எடுத்து, ஒரு துணியை அந்தச் சாற்றில் நனைத்து முன் நெற்றியில் ஒற்றியெடுக்கவும்.

                  இவ்வாறு செய்தால் வழுக்கை ஏற்படாமல் இருப்பதோடு, வழுக்கை விழுந்த இடங்களிலும் மீண்டும் முடி வளரத் தொடங்கும்.

நகத்தை பராமரிக்க | பேன் தொல்லை நீங்க | வழுக்கை ஏற்படாமல் இருக்க

கருத்துகள் இல்லை