வயிறு எரிச்சல் வராமல் தடுக்க
குளிர்ந்த பால் நமது வயிற்றில் உள்ள அமிலத் தன்மையை சரி சமமாக்குகிறது.
எனவே நமக்கு இதனால் வயிறு எரிச்சல் வராமல் தடுக்கப்படுகிறது. எனவே உணவு உண்ட பிறகு ஒரு கிளாஸ் குளிர்ந்த பால் அருந்துவதால் நல்ல மாற்றத்தை காண முடியும்.
வயிற்று வரிகளை ஒழிக்க
கர்ப்பகால வயிற்று வரிகளை ஒழிக்க சூடான கடுகு எண்ணெயுடன் வெண்ணெயை கலந்து தினமும் வயிற்றில் தடவி வரவும்.
வறண்ட சருமம் பொலிவு பெற
வெறும் பாலாடை அல்லது பாலாடையுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து முகம், கை, கால்களில் தேய்த்து ஊறிய பிறகு குளிப்பதும் நல்ல பலனைத் தரும்.
பாலாடையுடன் கசகசாவை ஊற வைத்து அரைத்து முகம் மற்றும் கை, கால்களில் பூசி, சிறிதுநேரம் கழித்து குளிப்பதும், சருமத்தை மென்மையாக்கும்.
கருத்துகள் இல்லை