* நெல் என்பது புல் வகையை சேர்ந்த ஒருவகை தாவரமாகும். இது தென்கிழக்காசியாவில் தோன்றியது.
* நெல் ஈரநிலங்களில் வளரக்கூடிய தாவரமாகும்.
* இப்பயிரின் விதை உமி என அழைக்கப்படுகிறது. நெல்லானது மேலுறை நீக்கப்பட்ட பின் உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு மேலுறை நீக்கப்பட்ட நெல் அரிசி என்று அழைக்கப்படுகிறது. ஆனால், அரிசிக்கு முளைக்கும் திறன் கிடையாது.
* சோளம், கோதுமைக்கு அடுத்து அதிகம் பயிரிடப்படும் தானியம் நெல் ஆகும்.
* உலகில் முதன் முதலாக ஆசிய நெல் (Oryza sativa), ஆப்பிரிக்க நெல் (Oryza glaberimma) என இரு இன நெற்பயிர்கள் பயிரிடப்பட்டன.
* ஆசியாவில் நெல் சாகுபடி கி.மு 4500க்கு முன்பாகவே பல நாடுகளில் ஒரே சமயத்தில் துவங்கியதாக கருதப்படுகிறது
* மேற்கூறிய இருவகை நெல் இனங்களின் பொதுவான முன்னோடி காட்டு நெல் இனம் oryza rufipogan ஆகும்.
* ஆசிய நெல் சிற்றினம் இமயமலை அடிவாரத்தில் தோன்றியதாகக் கருதப்படுகிறது.இந்தியப்பகுதியில் oryza sativa var. indica-வும், சீனப்பகுதியில் oryza sativa var. japonica-வும் தோன்றின.
* இந்தியாவில் ஔவையார் மற்றும் பழம்பெரும் புலவர்கள் பாடிய நெல் மற்றும் அரிசி பற்றிய பாடல்கள் பல உள்ளன. நெல் விளையும் பகுதிகளில், நெல் நடுதல், அறுவடை போன்ற காலத்தையோட்டி பண்டிகைகளும் கொண்டாடப்படுகின்றன.
* தமிழ்நாட்டில் திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், விழுப்புரம், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் நெல் சாகுபடி அதிகம் செய்யப்படுகிறது.
கருத்துகள் இல்லை