வியர்வை நாற்றம் நீங்க
இரவு தூங்குவதற்கு முன்பாக சிறிதளவு வினிகரை பஞ்சில் நனைத்து அக்குள் பகுதியில் தடவிக்கொள்ள வேண்டும்.
பின்னர் காலையில் ஆன்டி-பாக்டீரியல் சோப் கொண்டு அக்குள் பகுதியை நன்றாக கழுவிக்கொள்ள வேண்டும்.
இப்படிச் செய்தால் வியர்வை நாற்றம் இருக்காது.
அக்குள் அரிப்பு நீங்க
அக்குள் அரிப்பு கடுமையாக இருந்து, அப்பகுதி மிகவும் வறட்சியுடன் இருந்தால், வைட்டமின் ஈ கேப்ஸ்யூலை வாங்கி, அதனுள் உள்ள எண்ணெயை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவுங்கள்.
இப்படி தினமும் 2-3 முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
அக்குள் கருமை நீங்க
சருமத்தில் இருக்கும் பல்வேறு பிரச்சனைகளை போக்குவதில் வேப்பிலை ஒரு சிறந்த மூலிகைப் பொருள். அந்த மூலிகைப் பொருள் சருமத்தை வெள்ளையாக்கவும் பெரிதும் உதவியாக உள்ளது.
ஆகவே வாரத்திற்கு ஒரு முறை வேப்பிலையை அரைத்து, அக்குளில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும்.
கருத்துகள் இல்லை