எண்ணெய்ப் பசை இருக்க
குளிக்கும் நீரில் சில சொட்டு தேங்காய் எண்ணெய்விட்டுக் குளிக்கலாம்.
இது சருமத்தில் எப்போதும் எண்ணெய்ப் பசை இருக்க உதவும்.
கருமை நிறம் குறைய
குங்குமப்பூவை பொடியாக்கி அதில் சில சொட்டுக்கள் பால் விட்டு கலந்து குழைத்துக் கொள்ளவும்.
இந்தக் கலவையை முகத்தில் பூசி வர முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் குறைவதை கண் கூடாகக் காணலாம்.
சரும பிரச்சனை தீர
கிரீன் டீயை முகத்திற்கு தொடர்ந்து எட்டு வாரங்கள் அப்ளை செய்வதன் மூலம், முகத்தில் உள்ள எண்ணெய் பசையானது குறையும். மேலும், எதிர்காலத்தில் முகப்பரு வருவது போன்ற பிரச்சனைகளும் குறையும்.
வெயிலில் ஏற்பட்ட கருமை மறைய
ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.
சரும சுருக்கம் நீங்க
நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் இரண்டையும் சமமாக எடுத்து முகம் மற்றும் உடல் முழுவதும் தடவி, சிறிது ஊற விட்டு கடலை மாவினால் தேய்த்துக் கழுவுங்கள். இதனால் சரும சுருக்கங்கள் நீங்கும்.
தோல் சொர சொரப்பு நீங்க
சிறிதளவு வெண்ணெயுடன் கொஞ்சம் தேன் கலந்து வாரம் ஒரு முறை உடல் முழுவதும் பூசினால் தோல் சொர சொரப்பு தானாகப் போகும்.
சருமம் நிறம் மாற
கேரட், ஆரஞ்சு சாறுடன் சிறிது பால், தேன் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவினால் சருமத்தின் நிறம் மாறும்
அரிப்பு குணமாக
கடுகு எண்ணெய் 6 சொட்டுகள் எடுத்து சூடாக்கி அதை அரிப்பு, தோல் உதிரும் இடங்களில் தடவி மசாஜ் செய்தால் அரிப்பு பறந்துவிடும்.
கருத்துகள் இல்லை