பல் வலி குணமாக
பல் வலி கடுமையாக இருந்தால், அதனை உடனடியாக போக்க சமையலறையில் இருக்கும் ஒரு கிராம்பை எடுத்து, வலியுள்ள பல்லின் மீது வைத்து, கடித்துக் கொண்டு இருக்க வேண்டும்.
கிராம்பில் உள்ள மருத்துவ குணம், பல் வலியைப் போக்கும்.
பல் வலியை தடுக்க
கொய்யா இலையில் ஆன்டி-மைக்ரோபியல், அழற்சி எதிர்ப்பு பொருள் மற்றும் உணர்ச்சியற்றதாக்கும் பண்புகள் உள்ளது.
எனவே பல் வலி இருக்கும் போது, கொய்யா இலையை வாயில் போட்டு மெல்ல வேண்டும்.
இல்லாவிட்டால், சிறிது கொய்யா இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அத்துடன் சிறிது உப்பு சேர்த்து, தினமும் இந்நீரைக் கொண்டு வாயைக் கொப்பளிக்க, பல் வலி வருவது தடுக்கப்படும்.
பற்குழி நீங்க
பேக்கிங் சோடா-கால்கப், உப்புத்தூள்-ஒரு சிட்டிகை, சர்க்கரை- ஒரு டீஸ்பூன், கற்பூரம்-ஒரு சிட்டிகை, லவங்கம்-4 இவை எல்லாவற்றையும் பொடி செய்துகொள்ளவும்.
அதில் ஒரு ஸ்பூன் எடுத்து அதில் 2, 3 சொட்டு எலுமிச்சைச் சாறு விட்டு, அதை தொட்டு விரலால் பற்களை அழுத்தித் துலக்கி வந்தால், பற்குழி, வாய் துர்நாற்றம் போன்றவை இல்லாமல், உங்கள் புன்னகை ஆரோக்கியமாக இருக்கும்.
கருத்துகள் இல்லை