எடை குறைய
பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.
உடல் எடை அதிகரிக்க
தினமும் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வர உடல் எடை அதிகரிக்கும்.
வியர்க்குரு நீங்க
மஞ்சள், சந்தனம், வேப்பிலை மூன்றையும் ஒரே அளவு எடுத்து, மென்மையாக அரைக்க வேண்டும்.
அதை வியர்க்குரு உள்ள இடங்களில் தடவி ஒரு மணி நேரத்துக்குப் பிறகு குளிக்க வேண்டும்.
இது போன்று வாரம் மூன்று முறை குளித்தால் வியர்க்குருவை விரட்டலாம்.
தேமல் மறைய
எலுமிச்சம் பழச்சாறுடன் துளசி இலைச்சாறைச் சேர்த்துத் தடவினால் தேமல் மறையும்.
கரும்படை மாற
கசகசாவை எலுமிச்சம்பழச்சாறு விட்டு அரைத்து, அடிக்கடி தடவி வந்தால் சில தினங்களில் உடல் சருமத்தில் தோன்றும் கரும்படை மாறி, சருமம் இயற்கை நிறம் பெறும்.
தீப்புண் கொப்பளம் ஏற்படாமல் இருக்க
தீப்புண் மீது பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் கொப்பளம் ஏற்படாது. எரிச்சலும் குறையும்.
உஷ்ணம் குறைய
வாரம் ஒரு முறையாவது நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது. வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும் உஷ்ணமும் குறையும்.
கருத்துகள் இல்லை