உதட்டிற்கு மேல் உள்ள கருமை நீங்க
ஒரு பௌலில் கேரட் ஜூஸை எடுத்து, பஞ்சுருண்டைப் பயன்படுத்தி கேரட் ஜூஸை உதட்டிற்கு மேலே தடவி 20-30 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.
இப்படி தினமும் செய்து வந்தால், உதட்டின் மேல் உள்ள கருமை நீங்கிவிடும்.
இதற்கு கேரட் ஜூஸில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் பீட்டா-கரோட்டீன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தான் காரணம். இவை பாதிக்கப்பட்ட சரும செல்களை சரிசெய்து, வெள்ளையாவதற்கு உதவும்.
உதடு கருமை நீங்க
பாலேட்டுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், கருமை மறைந்து சிவந்த நிறம் உண்டாகும்.
உதடு சிவப்பாக
ரோஜா இதழ்கள் பால் இரண்டையும் சேர்த்து மிக்சியில் நன்கு அரைத்து கூழாக்கி அதை உதடுகளின் மேல் அப்ளை செய்து 10 நிமிடம் கழித்து காட்டனை தண்ணீரில் நனைத்து துடைக்க வேண்டும்.
இவ்வாறு வாரத்திற்கு இருமுறை செய்து வந்தால் உதடு சிவப்பாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.
உதடுகள் மென்மையாக
வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச்சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்.
கருத்துகள் இல்லை