* மரத்தின் பெயர் : பன்னீர் மரம்
* தாவரவியல் பெயர் : கெட்டார்டா ஸ்பீசியோசா
* ஆங்கில பெயர் : Indian Laventer Tree
* தாயகம் : இந்தியா
* தாவர குடும்பம் : பரூபியேசி
* மற்ற பெயர்கள் : பீச் கார்டெனியா, சீப்ரா வுட், சீ ரேண்டியா, இண்டியன், சிவகாய மரம், மயிலாம்பூ மரம், தெய்வப்பூ மரம், ரவா பூ, ஹின்மா
பொதுப்பண்புகள் :
* இந்த மரம் ஆண்டு முழுவதும் பூக்கும் தன்மை உடையது.
* இந்த மரம் ஒரு தெய்வீக மரமாக கருதப்படுகிறது.
* இந்த மரத்தின் பழங்களுக்குக் காம்புகள் இருக்காது.
* ஒவ்வொரு பழத்திலும் 4 முதல் 6 விதைகள் இருக்கும்.
* இந்த மரம் வளர்வதற்கு நல்ல வடிகால் வசதி அவசியமாகும்.
* இதன் விதைகள் முளைக்க பல மாதங்கள் ஆகும். இவை பெரும்பாலும் விலங்குகள் போன்ற பிற உயிரினங்களின் மூலமாகவே பரவுகின்றன.
* உயரம் - 16 முதல் 30 மீட்டர்.
பயன்கள் :
* பன்னீர் மரத்தின் இலைகள் தலைவலி, கை கால்வலி, போன்றவற்றை குணப்படுத்த பயன்படுத்தப்படுகின்றன.
* பன்னீர் பூக்கள் மிகுந்த மணத்துடன் இருப்பதால் பலர் இந்த பூக்களை எண்ணெயில் கலந்து தலைக்கு தேய்த்து கொள்கிறார்கள்.
* இதன் இலைகள் பெரிதாக உள்ளதால், உணவு பரிமாறுவதற்கும் இது பயன்படுகிறது.
* கருப்பு நிற சாயமும் இந்த இலைகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
* இந்த மரங்களின் அடிமரக் கட்டைகள், பலகைகள், கம்புகள், வேர்க்கட்டைகள் போன்றவை மரச்சாமான்கள், மீன்பிடி தூண்டில் கழிகள், பறவைகள் பிடிப்பதற்கான வலைகளில் பொருத்தும் கைப்பிடிகள், துடுப்புகள் போன்றவை செய்ய பயன்படுகிறது.
வளர்ப்பு முறைகள் :
* பன்னீர் மரமானது விதை, வேர்க்குச்சி, நாற்று போன்றவற்றின் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.
* மரங்களை வளர்க்க, மரக்கிளையை 6 அடி அளவிற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
* ஒரு சாக்குப்பையில் செம்மண் மற்றும் கரம்பை மணலோடு மக்கிய குப்பைகளை கலந்து தண்ணீர் ஊற்ற வேண்டும்.
* அதற்கு பிறகு 6 அடி உயரமுள்ள மரக்கிளையை அதில் நட வேண்டும். அதன் பிறகு 14-வது நாள் துளிர்க்க ஆரம்பித்துவிடும்.
* 35-வது நாள் இலைகள் வந்துவிடும். 75-வது நாள் ஒரு மரம் நடவு செய்ய தயாராகிவிடும்.
* விதை போட்டு மூன்றாண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகள், மரக்கிளைகளை வெட்டி நட்டால் மரமாக வளர்ந்துவிடும்.
நோய் தடுக்கும் முறைகள் :
* இலை முடிச்சு நோய்கள் பன்னீர் மரத்தை தாக்குகின்றன.
* இதனால் இலைகள் சுருண்டு விடுவதால் ஒளிச்சேர்க்கை பாதிப்படைகிறது.
* இலை முடிச்சு நோயை கட்டுப்படுத்த வேப்பங்கொட்டை கரைசலை தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.
கருத்துகள் இல்லை