* மரத்தின் பெயர் : நாகலிங்கமரம்

            * தாவரவியல் பெயர் : கூரூபிட்டா கியானென்சிஸ்

            * ஆங்கில பெயர் : Cannonball Tree

            * தாயகம் : அமெரிக்கா

            * மண் வகை : கரிசல் மண்ணில் வளரும் மரம்

            * தாவர குடும்பம் : லெசித்திடேசியே

பொதுப்பண்புகள் :

            * பல தாவரங்கள் கடல் கடந்து நம் மண்ணை வந்தடைந்துள்ளன. அவை நம்மிடையே பரவலானது மட்டுமல்லாமல், நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவும் மாறிவிடுவது உண்டு. அவற்றில் ஒன்றான மரம் தான் நாகலிங்க மரம்.

           * நாகலிங்க மரம் சராசரியாக 35 மீட்டர் உயரம் வரை வளரும் தன்மை கொண்டது. இந்த மரத்தில் பூக்கள் கொத்துக்கொத்தாகப் பூக்கும்.

           * நாகலிங்க மரம் ஆண்டு முழுவதும் பூக்கும் தன்மை கொண்டது. அடிமரத்தில் இருந்து நேரடியாகக் கிளைகள் இல்லாமல் இருக்கும் மரம்.

           * நீண்ட கிளைகள் போன்ற காம்புகளில் பூக்கள் பூப்பதால் மரமே பூக்கள் நிறைந்து காட்சியளிக்கும். ஒரு மரத்தில் ஒரு நாளில் அதிகபட்சமாக ஆயிரம் மலர்கள்கூடப் பூக்கும்.

           * இளஞ்சிவப்பு வண்ணமும், சிவப்பு வண்ணமும் கலந்த மாறுபட்ட தோற்றம் கொண்ட மலர்கள் நறுமணம் வாய்ந்தவை.

           * நாகலிங்க மரத்தின் காய்கள் உருண்டையாக பந்து போன்று காணப்படும்.

           * நாகலிங்க மரத்தின் உலர்ந்த பழங்கள் கீழே விழுந்து தரையில் பட்டு வெடித்து பெரும் சத்தத்தை ஏற்படுத்தும்.

           * பாம்பு படமெடுப்பது போன்ற மலரின் தோற்றத்தால் இந்த மலர் புனிதமாகக் கருதப்படுகிறது. நாட்டின் பல சிவாலயங்களில் இந்த மரம் வளர்க்கப்படுகிறது.

          * நாகலிங்க மரங்கள் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில சிவாலயங்களிலும், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சில இடங்களிலும் இருக்கிறது.

பயன்கள் :

            * நாகலிங்க பூவும், மரமும் மருத்துவ உலகில் நோய் தீர்க்க பெரிதும் உதவுகின்றன.

             * வேதிப்பொருட்களான டைஹைட்ரோ டையாக்சின்டோலோ குயினாசோலோன், டிரிப்டான்ரின், இன்டிகோ இன்டுருபின், ஐசாடின் போன்றவை காணப்படுகின்றன.

             * நாகலிங்க மரத்தின் பட்டையும், காயும் நச்சுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.

             * இலைகள் தோல் நோய்களுக்கு மேற்பூச்சாகி நிவாரணமளிக்கிறது. இலை மற்றும் பழங்களிலுள்ள டைஹைட்ரோ டையாக்சின்டோலோ குயினாசோலோன், டிரிப்டான்ரின், இன்டிகோ இன்டுருபின், ஐசாடின் ஆகியன எதிர் உயிரியாக செயல்பட்டு தோல் உடலின் மென்மையான பகுதிகளில் வளரும் பூஞ்சை, பாக்டீரியா கிருமிகளை அழிக்கின்றன.

            * நாகலிங்க மரத்தின் பட்டை மலேரியா சுரத்தை நீக்க பயன்படுத்தப்படுகிறது. குளிர்காலங்களில் ஏற்படும் வயிற்று உபாதைகளுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

            * நாகலிங்க மரத்தின் இளம் இலைகள் தோல் நோய்களுக்கு மருந்தாக உதவுகிறது.

            * பற்களை பாதுகாக்கும் இதன் இலைகளை மையாக அரைத்து, பூஞ்சை கிருமியால் தோன்றும் சொரி, சிரங்கு, படர்தாமரை, படை உள்ள இடங்களில் தடவ குணமுண்டாகும்.

            * நாகலிங்க மரத்தின் இலைகள் நுண்கிருமிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டதால் இவற்றை மென்று சாப்பிட பல் மற்றும் ஈறு இடைவெளியில் தங்கியுள்ள கிருமிகளை வெளியேற்றி பல்வலியை குறைக்கின்றன. பற்கள் சொத்தையாகாமல் தடுக்கின்றன.

வளர்ப்பு முறைகள் :

            * விதைகளை விதை நேர்த்தி செய்வது அவசியமாகும். ஏனெனில் விதையின் உறக்க நிலை காரணமாக முளைப்புதிறன் குறைவாக இருக்கும்.

            * இந்த விதை உறக்க நிலையை நீக்க விதைகளை சாக்குப்பைகளில் நிரப்பி நன்றாக கட்டி சாணப்பாலில் இரண்டு நாட்கள் ஊற வைக்க வேண்டும்.

            * பின்னர் சாணப்பாலிலிருந்து வெளியே எடுத்து இளம் வெயிலில் 12 மணி நேரம் உலர்த்த வேண்டும். மீண்டும் விதைகளை சாணப்பாலில் ஒரு நாள் ஊற வைக்க வேண்டும். பின்னர் சாணப்பாலிலிருந்து வெளியே எடுத்து இளம் வெயிலில் 12 மணி நேரம் உலர்த்த வேண்டும்.

            * மீண்டும் விதைகளை சாணப்பாலில் ஒரு நாள் ஊற வைக்க வேண்டும். இவ்வாறு சுமார் ஒரு வாரம் விதை நேர்த்தி செய்வதன் மூலம் விதைகளின் முளைப்புத்திறன் அதிகரிக்கும். இவ்வாறு விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை தாய்பாத்தியில் விதைக்க வேண்டும்.

நோய் தடுக்கும் முறைகள் :

              * நாற்றுகளை இலையுண்ணிகளான கம்பளி புழுக்கள், வண்டுகள், வெட்டுக்கிளிகள் மற்றும் இலை சுரண்டிகளான சிறிய இளஞ்சிவப்பு புழுக்கள் ஆகியவை தளிர்களையும் இலைகளையும் உண்ணும். மேலும் சாறு உறிஞ்சிகளான அசுவினி, தத்துப்பூச்சி, மாவுப்பூச்சி மற்றும் செதில் பூச்சிகள் இலைகளில் உள்ள சாறுகளை உறிஞ்சும். இதனால் செடிகளின் வளர்ச்சி பாதிக்கப்படும்.

              * மேலும் இப்பூச்சிகளை கட்டுப்படுத்த உயிர்பூச்சிக் கொல்லிகளான பஞ்சகாவ்யா அல்லது வேம்புபால் தெளித்து பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்

நாகலிங்கமரம் பொதுப்பண்புகள் | பயன்கள் | வளர்ப்பு முறைகள் | நோய் தடுக்கும் முறைகள்

கருத்துகள் இல்லை