* மரத்தின் பெயர் : சந்தன வேம்பு மரம்

          * தாவரவியல் பெயர் : டூனா சிலியேட்டா

          * ஆங்கில பெயர் : Toon tree

          * தாயகம் : இந்தியா, ஆப்கானிஸ்தான்

          * மண் வகை : ஆழமான மண், வளமான மண் மற்றும் வண்டல் மண்ணில் வளரும் மரம்

          * தாவர குடும்பம் : மீலியேசி

          * மற்ற பெயர்கள் : டோனா

பொதுப்பண்புகள் :

            * சந்தன வேம்பு மரம் வேகமாக வளரக்கூடிய மரமாகும். மரப்பட்டை சாம்பல் நிறத்தில் காணப்படும்.

            * இந்த மரத்தின் பூக்கள் மஞ்சள் நிறமாகவும், அதிக தேன் உள்ளதாகவும் இருக்கும்.

            * இந்த மரம் பொதுவாக பசுமை மாறா காடுகளில் அதிகம் காணப்படுகிறது.

            * இந்த மரம் வறட்சி மற்றும் பனியை தாங்கி வளராது.

            * கடல் மட்டத்திலிருந்து சுமார் 1500 மீ உயரம் வரை வளரக்கூடியது.

பயன்கள் :

            * சாலையோரங்களில் அலங்கார மரமாக இந்த சந்தன வேம்பு மரம் வளர்க்கப்படுகிறது.

            * மேலும் மரச்சாமான்கள், கதவு, ஜன்னல் போன்ற கட்டுமான பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.

            * இசைக்கருவிகளும் இந்த மரத்தின் மூலம் தயாரிக்கப்படுகிறது.

            * பூக்களில் இருந்து பெறப்படும் மஞ்சள் நிற சாயம், துணிகளில் சாயமேற்ற பயன்படுத்தப்படுகிறது.

            * இந்த மரத்தின் பட்டையிலிருந்து பெறப்படும் நார் கயிறு மற்றும் பைகள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.

             * மேலும் இதன் பழத்தில் இருந்து நறுமண எண்ணெய் தயார் செய்யப்படுகிறது.

வளர்ப்பு முறைகள் :

            * சந்தன வேம்பு மரம் பொதுவாக விதைகள் மற்றும் மறுதாம்பு மூலமாக இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது.

            * மேலும் விதைப்பு மற்றும் நாற்றங்கால் மூலமாக நடவு செய்யப்படுகிறது.

            * இந்த மரத்தை விதைப்பு செய்ய மே முதல் ஜூன் மாதங்கள் ஏற்றவை.

            * விதைத்த 7 வது நாட்களில் முளைக்க ஆரம்பித்துவிடும்.

            * 6-8 மாத நாற்றுகளை நடவு செய்யலாம்.

            * இந்த மரத்தை நடவு செய்ய 30 x 45 செ.மீ அளவுள்ள குழிகள் தேவைப்படும்.

            * மேலும் 3 x 3 மீ இடைவெளியில் நடவு செய்யலாம்.

நோய் தடுக்கும் முறைகள் :

            * நடவு செய்து 4-வது வருடத்தில் பக்க கிளைகளை அகற்றி கவாத்து செய்து விட வேண்டும்.

            * மேலும் களையெடுத்தலை அவ்வபோது மேற்கொள்ள வேண்டும்.

            * இந்த மரம் 10-15 வருடங்களில் பயன் அளிக்க ஆரம்பித்துவிடும்.

சந்தன வேம்பு மரம் | பொதுப்பண்புகள் | பயன்கள் | வளர்ப்பு முறைகள் | நோய் தடுக்கும் முறைகள்

கருத்துகள் இல்லை