* மரத்தின் பெயர் : கொய்யா மரம்
* தாவரவியல் பெயர் : பெசிடியம் குஜாவா
* ஆங்கில பெயர் : Guava Tree
* தாயகம் : அமெரிக்கா, கரீபியன்
* மண் வகை : அனைத்து மண்ணிலும் வளரும் மரங்கள்
* தாவர குடும்பம் : மிர்டேசி
* மற்ற பெயர்கள் : ஜாம்பலா, கோவா, பலாம்பர்
பொதுப்பண்புகள் :
* கொய்யா சிறிய மரமாகும். இது பொதுவாக தேனீக்களினால் இலகுவாக மகரந்தச் சேர்க்கைக்கு உள்ளாகிவிடும்.
* நாட்டின் மொத்த பரப்பளவில் கொய்யா 2.5 லட்சம் ஹெக்டரில் சாகுபடி செய்யப்படுகிறது.
* சுமார் 2.27 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.
* இது ஆப்பிள் பழத்துக்கு நிகரான சத்துகளையும், சுவையையும் கொண்டிருப்பதால் ஏழைகளின் ஆப்பிள் எனப்படுகிறது.
பயன்கள் :
* கொய்யாப் பழத்தில் முக்கிய உயிர்சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கொய்யாமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது, இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டுள்ளது.
* கொய்யாமரத்தின் இலைகள் திசுக்களைச் சுருக்கும் மற்றும் குருதிப்போக்கினைத் தடுக்கும் திறன் உடையவை மற்றும் மலச்சிக்கலை போக்கும்.
* கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதயம் சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வு தருகின்றன.
* கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயத்தின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும். மேலும் கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன.
* மது போதைக்கு அடிமையான மது பிரியர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட நினைத்தால் இப்பழத்தை அதிகம் சாப்பிடலாம்.
* உடல் எடையை குறைக்க கொய்யா இலையின் சாற்றுடன், தேன் கலந்து, தினமும் காலை, மாலை என சாப்பிட்டு வந்தால் போதுமானது.
* சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த கொய்யா இலையை வெயிலில் காய வைத்தோ அல்லது பச்சையாகவோ நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ தயாரித்து சாப்பிடலாம்.
* கொய்யா இலையை சாதாரணமாக வாயில் போட்டு மென்றும் அல்லது கொய்யா இலையில் டீ செய்து சாப்பிட்டு வந்தால், வாயில் ஏற்படும் பல் வலி, ஈறு பிரச்சனைகள், வாய்ப்புண் மற்றும் தொண்டைப் புண் ஆகியவற்றை உடனே சரி செய்யலாம்.
வளர்ப்பு முறைகள் :
* ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள், கொய்யா நடவு செய்ய ஏற்ற மாதங்கள் ஆகும்.
* கொய்யா மரத்தை நடவு செய்ய தேர்வு செய்த நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு பண்பட உழவு செய்ய வேண்டும். பின்பு 20 அடி இடைவெளியில் ஒன்றரை அடி நீள, அகல, ஆழம் உள்ள குழிகள் எடுக்க வேண்டும்.
* பின்பு அந்த குழியில் தொழு உரம், ஒரு கிலோ வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை மேல் மண் கலந்து இட்டு மூட வேண்டும்.
* பதியன்கள் மூலமாகவே கொய்யாச் செடிகள் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
* பாலித்தீன் பையில் அல்லது மண் தொட்டியில் உள்ள செடிக்கு எவ்வித சேதமும் ஆகாமல் எடுத்து குழியின் மத்தியில் நடவு செய்ய வேண்டும்.
* மிக உயரமான நாற்றுகளாக இருந்தால், அதன் அருகே இரண்டு காய்ந்த குச்சிகளை நட்டு, கொய்யா செடியையும், குச்சியையும் பிணைத்து கட்டி விட வேண்டும்.
* நாற்று நடவு செய்தவுடன், குழி முழுவதும் நனைந்து, மண் இறங்கி இறுக்கம் அடையும் அளவுக்கு தண்ணீர் விட வேண்டும்.
* பின்னர், மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் விட வேண்டும். அதன்பின், மண்ணின் தன்மையை பொறுத்து ஏழு முதல் பத்து நாட்களுக்கு ஒருமுறை நீர் பாசனம் செய்ய வேண்டும்.
* கொய்யா செடி நடவு செய்த எட்டு மாதங்கள் வரை பூக்கின்ற பூக்களை கிள்ளி விட வேண்டும். செடி உயரமாக வளர விடாமல் கவாத்து செய்து, கிளைகளை புதர் போல படர விட வேண்டும்.
* அதேபோல் நுனிக்கொழுந்தைக் கிள்ளிவிட்டால் கிளைகள் எல்லாம் புதிதாக வளரும். இதனால் அதிகப் பழங்கள் கிடைக்கும். கொய்யா சாகுபடிக்கு சொட்டு நீர் பாசனம் சிறந்த முறையாகும்.
* செடிகளுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை தொழுவுரம் கொடுக்க வேண்டும். தொழுவுரம் கொடுப்பதற்கு முன்பாக கவாத்து செய்ய வேண்டும்.
நோய் தடுக்கும் முறைகள் :
* கொய்யா மரங்களை அதிகமாக தாக்குவது மாவுப்பூச்சிகள். 15 நாட்களுக்கு ஒரு முறை 200 லிட்டர் தண்ணீருடன் ஒன்றரை லிட்டர் பஞ்சகாவ்யம், மூன்று லிட்டர் ஜீவாமிர்தம் மற்றும் 500 மில்லி வேப்ப எண்ணெய் கலந்து மரங்கள் முழுவதும் நனையும்படி தெளிக்க வேண்டும்.
* அதேபோல் கொய்யாவில் நூற்புழுத் தாக்குதல் காணப்படும். ஒவ்வொரு மரத்தைச் சுற்றி செண்டுமல்லி செடிகளை நட்டு வைப்பதன் மூலம் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம். நூற்புழு அதிகம் தென்பட்டால் மரத்தின் அருகில் குழி எடுத்து ஒரு கைப்பிடி அளவு வேப்பங்கொட்டையை வைத்து மூட வேண்டும்.
* கொய்யா சாகுபடி செய்த ஒரு ஆண்டுகளுக்கு பிறகு காய்கள் காய்க்கத் தொடங்கும். பின் மூன்றரை ஆண்டுகளுக்கு முழுவதுமாக மகசூல் கிடைக்கும். காய்கள் நல்ல பளபளப்பாகவும், அடர் பச்சை நிறத்தில் இருக்கும் போது அறுவடை செய்யலாம்.
கருத்துகள் இல்லை