* மரத்தின் பெயர் : பூவரசு மரம்
* தாவரவியல் பெயர் : தெஸ்பீசியா பாபுல்னியா
* ஆங்கில பெயர் : Portia Tree
* தாயகம் : இந்தியா
* மண் வகை : அனைத்து வகையான மண்ணிலும் வளரும் மரங்கள்
* தாவர குடும்பம் : மால்வேசியே
பொதுப்பண்புகள் :
* பல்வேறு காரணிகளால் பரவிக்கிடக்கும் கரியமில வாயுவை உறிஞ்சிக்கொண்டு, பிராணவாயுவை வெளிவிடும் பூவரசு, அனைத்து வீடுகளிலும் இருக்க வேண்டிய முக்கியமான மரம்.
* மரம் கடுமையான புயலிலும் சாயாத தன்மைகொண்டது. சாய்ந்தாலும் சாய்ந்த நிலையிலேயே வளரும் தன்மை கொண்டது.
* இதய வடிவ இலைகளையுடையது பூவரச மரம்.
* பூவரசு மரததை காயகல்ப மரம் என்றும் அழைக்கிறார்கள்.
* காயகல்ப மரமான பூவரசு பூமிக்கு அரசன் என்று அழைக்கப்படும் பெருமையுடையது.
* இந்த மரம் இந்தியா முழுவதும் காணப்படும். குறிப்பாக தென்னிந்தியாவில் அதிகமாகக் காணப்படுகிறது. இது கொட்டைப் பூவரசு சாதாரணப் பூவரசு என இருவகைப் படும்.
பயன்கள் :
* பூவரசு மரத்தின் வேர்ப்பட்டையை நீர் விட்டு நீர் சேர்த்து கொதிக்க வைத்து அதில் 50 மில்லி அளவு எடுத்து 10 மில்லி விளக்கெண்ணெய் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் பேதியாகும். இதன் மூலம் தோல் நோய்களிலிருந்து விடுதலை கிடைக்கும்.
* செதில் செதிலாக உதிரக்கூடிய சொரியாசிஸ் நோய்க்கு பூவரசம்பட்டை நல்ல மருந்தாகும்.
* முற்றிய மரத்தின் பட்டையை இடித்துச் சாறு எடுத்து அதை வாயில் வைத்துக் கொப்புளிப்பதோடு உள்ளுக்குள் விழுங்கி வந்தால் உதட்டில் வரக்கூடிய வெண்தேமல் சரியாகும்.
* இம் மரம் வீட்டு ஜன்னல்கள், கதவுகள் செய்வதற்கும், மரச்சாமான்கள் செய்வதற்கும் ஏற்றவை.
வளர்ப்பு முறைகள் :
* பூவரசு, அனைத்து மண்ணிலும் சிறப்பாக வளரும். வறட்சியைத் தாங்கும் தன்மையுடையது. கடும்கோடையில்கூட பசுமையாக இருக்கும். இதை போத்து (குச்சிகள்) மூலமாக நடவு செய்வது சிறந்தது. போத்துகளை, செங்குத்தாக நடவு செய்தால், மரம் வளர்ந்த பிறகு, நிறைய பொந்துகள் உருவாகும். அதனால் படுக்கை முறையில் பதியன் போட்டால், இந்த பிரச்னையைத் தவிர்க்கலாம்.
* 6 அடி நீளம், அரை அடி ஆழத்தில் குழி எடுக்க வேண்டும். இதில் முக்கால் பங்கு மணலையும், காய்ந்த சாணத்தையும் போட்டு, 6 அடி நீளம் கொண்ட பூவரசம் போத்துகளை பதித்து, மண்ணால் மூடி, காற்றுப் போகாமல் மிதித்து, தண்ணீர் தெளிக்க வேண்டும். வாரம் ஒரு முறை தண்ணீர் ஊற்ற வேண்டும்.
* அடுத்த சில வாரங்களில், ஒரு போத்தில் இருந்து பல துளிர்கள் வெடித்து வந்திருக்கும். போத்தின் இரண்டு ஓரங்களிலும் உள்ள செழிப்பானத் துளிர்களை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றை கையால் ஒடித்து விட வேண்டும். அதன் பிறகு, பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விட்டால் போதுமானது. இப்போது மரத்துக்கு மரம், வரிசைக்கு வரிசை 6 அடி இடைவெளி இருக்கும். இதுபோல் பதியன் போட்டால் போத்துகளைப் பதியன் செய்யலாம்.
* நடவு செய்த ஆறு மாதங்களுக்குப் பிறகு, தண்ணீர் பாய்ச்சத் தேவையில்லை. ஆண்டுக்கு ஒரு முறை மரங்களை கவாத்து செய்ய வேண்டும். வேறு பராமரிப்புகள் தேவையில்லை.
நோய் தடுக்கும் முறைகள் :
* இந்த மரத்திற்கு நோய் தாக்குதல் குறைவு.
கருத்துகள் இல்லை