* மரத்தின் பெயர் : பெரிய நெல்லி மரம்

           * தாவரவியல் பெயர் : பில்லாந்தஸ் எம்பிலிகா

           * ஆங்கில பெயர் : Gooseberry tree, Amla tree

           * தாயகம் : இந்தியா

           * மண் வகை : ஈரமான வளமுள்ள மணல்சாரி மண்ணில் வளரும் மரம்

           * தாவர குடும்பம் : யுபோர்பியேசி

           * மற்ற பெயர்கள் : அரிநெல்லி, காட்டு நெல்லி

பொதுப்பண்புகள் :

            * பெரு நெல்லி உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ அல்லது மஞ்சளாகவோ காணப்படும்.

           * இதில் பனாரசி, என்ஏ 7, கிருஷ்ணா, கஞ்சன், சக்கயா மற்றும் பிஎஸ்ஆர் போன்ற ரகங்கள் உள்ளன.

           * இம்மரத்தினை வளர்ப்பதன் மூலம் மண் சரிவு, மண் அரிப்பு ஏற்படுவதைத் தவிர்த்து மண்ணின் தன்மை கெடாமல் நிலைப்படுத்த உதவுகிறது.

           * இந்த நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும்.

பயன்கள் :

            * வேளாண் கருவிகள் செய்ய, மேஜை நாற்காலிகள், தூண்கள் செய்ய, காகிதம் தயாரிக்க இந்த மரம் பயன்படுகிறது.

            * வீசும் காற்றின் வேகத்தைத் தடுக்கும், தூசியினை வடிகட்டும் மற்றும் காற்றை தூய்மைப்படுத்தும் திறன் இந்த மரத்திற்கு உள்ளது.

            * பெருநெல்லிக்காய் தோல் வியாதிகளைக் குணப்படுத்தும் மூலிகை மருந்துகளில் முக்கியத்துவம் வாய்ந்தது.

            * இது ரத்த சுத்திகரிப்பிற்கு பெரிதும் உதவுகிறது. அதனால் பருக்கள், கொப்புளங்கள் போன்றவை வராமல் தடுக்கிறது. சளியை வெளியேற்றி, சுவாசமண்டலத்தைச் சீராக இயக்குகிறது.

            * நீண்ட நாள் இருந்து வரும் இருமல், ஆஸ்துமா, எலும்புருக்கி நோய் போன்ற நோய்களுக்கு மருந்தாக உதவுகிறது. மனஇறுக்கத்தைப் போக்கி, நுண்ணறிவுடன் செயல்பட வழிவகுக்கிறது.

            * பக்கவாதம், நரம்புத்தளர்ச்சி போன்ற நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது. மூளை பலம் பெறவும், ஐம்புலன்கள் சீராக இயங்கவும் உறுதுணை புரிகிறது.

            * காய்ச்சல் உண்டாகாதவாறு தடுக்கிறது. காயங்கள், வீக்கம் போன்றவற்றால் உண்டாகும் வலிகளைப்போக்கி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

            * கண் பார்வைத்திறனை அதிகரிக்கிறது. கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல், கண் சிவத்தல் போன்ற கண் சம்பந்தமான குறைபாடுகளைப் போக்குகிறது.

           * ரத்தத்தில் உள்ள குளுக்கோசின் அளவைக் கட்டுப்படுத்தி சர்க்கரை நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றலைக் கொடுத்து ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

வளர்ப்பு முறைகள் :

             * பெருநெல்லியை பயிரிட நிலத்தைத் தயார் செய்வதற்கு முன்னதாகவே நிலத்தில் தொழுஉரம், மண்புழு உரம் போன்றவற்றை போட்டு உழவு செய்து கொள்ள வேண்டும்.

             * இந்த சாகுபடியில் மொட்டு கட்டு முறை மற்றும் திசு வளர்ப்பின் மூலம் நல்ல தரமான பெருநெல்லி நாற்றுக்களை உருவாக்கலாம்.

             * மொட்டு கட்டும் முறையில், ஓராண்டு சென்ற தண்டின் பருமன் ஒரு செ.மீ இருக்கும்போது தாய் மரத்திலிருந்து மொட்டுக்களைத் தேர்ந்தெடுத்து நாற்றுக்களை உருவாக்கலாம்.

             * ஜூன் - ஜூலை மற்றும் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் பெருநெல்லி நாற்றுக்களை நடவு செய்யலாம். 9 மீ x 9 மீ என்ற இடைவெளியில் நடவு செய்யலாம்.

             * நடவு செய்வதற்கு முன்னதாக விதைகளை ஜீவாமிர்த கரைசலுடன் விதைநேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.

நோய் தடுக்கும் முறைகள் :

            * இளமையான புதிய நெல்லி செடிகளை இரண்டு அடி உயரத்திற்கு பக்கக் கிளைகள் வளரவிடாமல் நேர் செய்து பின்னர் 4 - 5 கிளைகளைத் தகுந்த இடைவெளியில் சுற்றிலும் வளருமாறு விட்டு பராமரிக்க வேண்டும்.

           * இளஞ்செடிகளுக்கு செடி ஒன்றிற்கு 20 கிலோ தொழு எருவும், மரங்களுக்கு 20 கிலோ தொழு எருவுடன் பஞ்சகாவிய கரைசல், மீன் அமிலம் போன்றவற்றை உரமாக கொடுக்கலாம்.

           * பூக்கள் அதிகமாக பூக்க தேமோர் கரைசலையும், பூக்கள் கொட்டாமல் இருக்க தேங்காய்ப்பால் கடலைப் புண்ணாக்கும் கொடுத்து வந்தால் நல்ல மகசூல் கிடைக்கும்.

          * காய்களில் கரும்புள்ளிகளும், பழுப்பு நிறமும் கலந்தும் காணப்பட்டால் அந்த செடிகளுக்கு மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசலையும், கற்பூர கரைசலையும் தெளித்து விட்டால் நாளடைவில் சரியாகிவிடும்.

          * வட்டமான துரு போன்ற அமைப்புகள், இலைகள் மற்றும் காய்களில் காணப்படும். இதனைக் கட்டுப்படுத்த இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கரைசலைத் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

பெரிய நெல்லி மரம் பொதுப்பண்புகள் | பயன்கள் | வளர்ப்பு முறைகள் | நோய் தடுக்கும் முறைகள்

கருத்துகள் இல்லை