* மரத்தின் பெயர் : தோதகத்தி மரம்
* தாவரவியல் பெயர் : டால்பெர்ஜியா லாட்டிஃபோலியா
* ஆங்கில பெயர் : Indian Rosewood Tree
* தாயகம் : இந்தியா
* மண் வகை : ஈரச் செழிப்பான மண்ணில் வளரும் மரம்
* தாவர குடும்பம் : பாபேசி
* மற்ற பெயர்கள் : ஈட்டி, நூக்கம், கலாசிசாம், கரிவிட்டி, இருகுடு செட்டு, பெட்டி
பொதுப்பண்புகள் :
* தோதகத்தி ஒரு கடினமான மரம். அதாவது உளி, இழைப்புளி, ரம்பம் போன்ற மர வேலை செய்ய பயன்படுத்தும் கருவிகளை தோதகத்தி மரத்தில் பயன்படுத்தும் போது கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் இந்தக் கருவிகள் முனை மழுங்கவும் அல்லது உடையவும் அதிகம் வாய்ப்புள்ளது. ஏனென்றால் அவ்வளவு கடினமான மரம் தோதகத்தி எனலாம்.
* இதன் உயரம் 36 முதல் 39 மீட்டர் ஆகும்.
* இந்த மரம் விதை, நாற்று, நார்க்குச்சி, வேர்ச்செடி போன்றவற்றின் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது.
பயன்கள் :
* தோதகத்தி மரமானது பலவகையான பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. அதாவது இதன் தழைகள் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுகிறது.
* இந்த மரத்தின் பட்டை டேனின் சத்து நிறைந்து காணப்படுவதால், தோல் பதனியிட உதவுகிறது.
* இந்த மரமானது மேஜை, நாற்காலி, பீரோ, கட்டிடப் பொருட்கள், ரயில் பெட்டிகள், ஒட்டுப்பலகைகள், வேளாண்கருவிகள் போன்றவை செய்யப் பயன்படுகின்றன.
* காகிதம் தயாரிப்பதற்கான மரக்கூழை இந்த மரம் தரும். இந்த மரத்தின் பூக்கள் தேன் தர வல்லது.
வளர்ப்பு முறைகள் :
* தோதகத்தி மரத்தை கன்றுகள் உற்பத்தி செய்து நடவு செய்யலாம். விதைகளை நாற்று விட்டு 20-30 செ.மீ உயரம் வளர்ந்தவுடன், தேவையான இடத்தில் நடவு செய்யலாம்.
* நடவு இடைவெளி 12 x 12 அடி இருத்தல் அவசியம். ஒரு ஏக்கருக்கு 500 கன்றுகள் வரை நடவு செய்யலாம்.
நோய் தடுக்கும் முறைகள் :
* இதில் நோய் தாக்குதல் குறைவு.
* இருப்பினும் வேப்பங்கொட்டை கரசைலை அவ்வபோது தெளித்து விடலாம்.
கருத்துகள் இல்லை