* மரத்தின் பெயர் : அச்சி நரிவிழி மரம்
* தாவரவியல் பெயர் : கார்டியா செபஸ்டியானா
* ஆங்கில பெயர் : Siricote or kopte
* தாயகம் : இந்தியா
* மண் வகை : பாறை மண் மற்றும் கடலோர மண்ணில் வளரும் மரம்
* தாவர குடும்பம் : பொராஜினேசியே
பொதுப்பண்புகள் :
* இந்த மரம் வறட்சி தாங்கி வளரும் ஆனால் பனி, நோய், பூச்சி போன்றவற்றைத் தாங்கி வளராது.
* வெப்பநிலையைப் பொறுத்து வளரும் தன்மை மாறுபடுகிறது.
* 25 அடி உயரம் வரை வளரும் பசுமை மாற மரமாகும்.
* இலை அடர் பச்சை நிறமும், பூக்கள் இளஞ்சிவப்பு நிறத்தினையும் கொண்டிருக்கும்.
* இலை காகிதம் போன்றும் சொரசொரப்புடனும், காய்கள் வட்டமாக வெள்ளை நிறத்திலும் இருக்கும்.
* ஒவ்வொருக் காயிலும் 2-4 விதைகள் இருக்கும்.
பயன்கள் :
* அலங்காரத்திற்காக வளர்க்கப்படுகிறது.
* தோட்டங்களில் நிழலுக்காக வளர்க்கப்படுகிறது.
* காய் மருத்துவ குணம் கொண்டது.
* மரம் வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.
* இலை உப்பு காகிதம் போல் பொருட்களை பளபளப்பாக்கிறது.
வளர்ப்பு முறைகள் :
* அச்சி நரிவிழி மரத்தின் விதை, கொதிக்கவைத்து இறக்கப்பட்ட நீரில் 24 மணி நேரம் விதை நேர்த்தி செய்யப்படுகிறது.
* நேரடி நடவு முறை, நற்றங்கால் விதைப்பு மூலம் நடவு செய்யப்படுகிறது.
* விதைகள் தாய் பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது.
* மார்ச்-ஏப்ரல் மாதம் விதைப்புக்கு ஏற்ற பருவமாகும்.
* நடவு செய்து 8-15 நாட்களில் முளைக்கின்றது.
* நடவு செய்ததில் இருந்து பாத்தியில் களைகள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* தினமும் பூவாளிக் கொண்டு தண்ணீர் தெளிக்க வேண்டும்.
* நாற்று இரண்டு இலைகள் வளர்ந்த பிறகு வளர் ஊடகம் நிரப்பபட்ட பாலீத்தின் பைகளுக்கு மாற்ற வேண்டும்.7 மாதக் கன்றுகள் நடவிற்கு ஏற்றது.
* மழை காலங்களில் நடவு செய்யலாம்.
* நடுவதற்கு முன்பு குழியானது நன்கு வெயிலில் உலர்த்தப்பட்டிருக்க வேண்டும்.
* குழியின் அளவு 30 கன செ.மீ ஆக இருக்க வேண்டும்.
* ஒவ்வொரு கன்றுகளுக்கும் 10 x 10 மீ இடைவெளி இருக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை