* மரத்தின் பெயர் : அரசமரம்
* தாவரவியல் பெயர் : பைகஸ் ரிலிஜியோசா
* ஆங்கில பெயர் : Peepal Tree
* தாயகம் : இந்தியா
* மண் வகை : அனைத்து வகையான மண்ணிலும் வளரும் மரம்
* தாவர குடும்பம் : மோரேசியே
பொதுப்பண்புகள் :
* அரசு என்பது பெரிதாக வளரக்கூடிய ஒரு தாவரமாகும். சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது.
* இத்தாவரத்தின் அடி மரத்தின் விட்டம் 3 மீட்டர் வரை வளரக்கூடியது.
* அரச மரம் மிகவும் உயரமாக படர்ந்து வளரும். பூக்காமலே காய்க்கும் வகையைச் சேர்ந்தது. இதன் பழங்கள் விதை நிறைந்தவை.
பயன்கள் :
* அரச மரத்தின் பழுப்பு இலைகளை எரித்துத் தூளாக்கி, தேங்காய் எண்ணெயில் கலந்து தடவி வந்தால் தீப்புண், அதனால் ஏற்பட்ட தழும்புகள் குணமாகும்.
* அரசம்பட்டையை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி வாய் கொப்பளித்து வர வாய்ப்புண் குணமாகும்.
* இதன் பட்டையை வறுத்துத் தீய்ந்த பின்னர் தூளாக்கி தேங்காய் எண்ணெயில் குழைத்துப் பூசிவர ஆறாத புண், சொறி, சிரங்கு போன்றவை குணமாகும்.
* இதன் பட்டையை இடித்துப் பொடியாக்கி 200 மில்லி லிட்டர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் தூளைப் போட்டு காய்ச்சி வடிகட்டி பால், சர்க்கரை சேர்த்துக் குடித்துவர இருமல் தணியும்.
* அரசம்பட்டைத் தூளில் 10-15 கிராம் எடுத்துக் கொண்டு, அதைத் தண்ணீரில் கலந்து காய்ச்சிக் குடித்துவர சொறி, சிரங்குகள் குணமாகும்.
* அரசமரக் குச்சியைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டி நீரில் விட்டுக் காய்ச்சி வடிகட்டி, அதில் தேன் சேர்த்துக் குடிக்க பித்தம் தணியும்.
வளர்ப்பு முறைகள் :
* மரங்களை வளர்க்க அவற்றின் மரக்கிளையை 6 அடி அளவிற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
* ஒரு சாக்குப்பையில் செம்மண் மற்றும் கரம்பை மணலோடு மக்கிய குப்பைகளை கலந்து தண்ணீர் ஊற்ற வேண்டும்.
* அதற்கு பிறகு 6 அடி உயரமுள்ள மரக்கிளையை அதில் நட வேண்டும். அதன் பிறகு 14-வது நாள் துளிர்க்க ஆரம்பித்துவிடும்.
* 30-வது நாள் இலைகள் வந்துவிடும். 70-வது நாள் ஒரு மரம் நடவு செய்ய தயாராகிவிடும்.
* செடி நடவு செய்து, அது மரமாக வளர சில ஆண்டுகளாகும். அதனால், மரக்கிளைகளை வெட்டி, நடவு செய்து மரங்களாக உருவாக்கலாம்.
* இவ்வாறு செய்வதனால் விதை போட்டு மூன்றாண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகள், மரக்கிளைகளை வெட்டி நட்டால் மரமாக வளர்ந்துவிடும்.
நோய் தடுக்கும் முறைகள் :
* இதில் நோய் தாக்குதல் குறைவு. இலைப்புள்ளி நோய் மரக்கன்று வளரும் ஆரம்பகாலத்தில் மட்டும் காணப்படும்.
* கட்டுப்படுத்த வேப்ப எண்ணெய் பயன்படுத்திக் கட்டுப்படுத்தலாம்.
கருத்துகள் இல்லை