* மரத்தின் பெயர் : மருதாணி மரம்

             * தாவரவியல் பெயர் : லோசோனியா இனேர்மிஸ்

             * ஆங்கில பெயர் : Henna Tree

             * தாயகம் : வட ஆப்பிரிக்கா, தென்மேற்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளிலும் பரவியுள்ளது.

             * மண் வகை : அனைத்து வகையான மண்ணிலும் வளரும் மரம்

             * தாவர குடும்பம் : லைத்திரேசியே

பொதுப்பண்புகள் :

             * மருதாணி எல்லாவகை நிலங்களிலும் வளரக்கூடியது. வெப்பத்தைத் தாங்கக்கூடியது.

             * எதிர் அடுக்கில் அமைந்த கூர் இலையைக் கொண்டது.

            * இலைகள் 2 - 4 செ.மீ. நீளமுடையது. இது சுமார் ஆறு மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய சிறு மரம்.

            * பூக்கள் கொத்தாக இருக்கும். வெள்ளை, சிகப்பு, மஞ்சள் மற்றும் ஊதா நிறங்களில் இருக்கும்.

             * பூக்கள் வாசனை உடையது. பூக்கள் நான்கு இதழ்களைக் கொண்டிருக்கும்.

             * மருதாணி மர பூக்கள் ஏப்ரல், மே மாதங்களில் பூத்துக் குலுங்கும்.

             * மருதாணி மரம் உருண்டையான காய்களைக் கொண்டது. காய்களில் சுமார் 45 விதைகள் இருக்கும்.

             * விதைகள் மருத்துவ குணமுடையது. இதை அட்டகர்ம மூலிகை என்றும் கூறுவர்.

             * இது விதை மற்றும் பதியன் குச்சிகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

             * இதன் பூர்வீகம் வட ஆப்பிரிக்கா, தென்மேற்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளிலும் பரவியுள்ளது.

பயன்கள் :

              * ஆறாத வாய்ப் புண், அம்மைப் புண் ஆகியவற்றிற்கு இதன் இலையை அரைத்து நீரில் கரைத்து வடித்து வாய் கொப்பளிக்கலாம். அரைத்து அம்மைப் புண்களுக்குப் பூசலாம்.

             * இதன் இலை மூலம் தயாரித்த தைலம் முடியை வளர்க்கும். இள நரையை அகற்றும்.

             * தூக்கமின்மைக்குத் தூக்க மாத்திரை சாப்பிடுதல் கூடாது. அது நரம்புத் தளர்ச்சியை உண்டாக்கும். மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றி, தலைமாட்டில் வைத்துப் படுத்தால் தூக்கம் வரும்.

             * இதன் வேர்ப் பட்டையை அரைத்துப் பற்றிட கால் ஆணி, புண் குணமாகும்.

             * வண்டு கடிக்கும், சொறி சிரங்கிற்கும் இதனைப் பூச்சு மருந்தாகப் பயன்படுத்தலாம்.

             * மருதாணியில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயை உடலில் பூசி வர உடல் எரிச்சல் குறையும்.

              * மருதாணி இலைகளை அரைத்து பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும்.

              * மருதாணி இலைகளை அரைத்து, உலர்த்தி, அதை தேங்காய் எண்ணெயில் போட்டு சிறுது காலத்திற்கு வைக்க வேண்டும். பின்னர் அந்த எண்ணெயை வடிகட்டி தலைக்கு தேய்த்து வர இளநரை மறையும் மேலும் கண்கள் குளிர்ச்சி பெறும்.

              * விரல்களுக்கு மருதாணி வைப்பது, அழகை தவிர்த்து, நகங்களுக்கு பாதுகாப்பு கவசமாகவும் விளங்குகிறது.

வளர்ப்பு முறைகள் :

             * அனைத்து மண்ணிலும் சிறப்பாக வளரும். வறட்சியைத் தாங்கும் தன்மையுடையது. கடும்கோடையில்கூட பசுமையாக இருக்கும். இதை போத்து (குச்சிகள்) மூலமாக நடவு செய்வது சிறந்தது. போத்துகளை, செங்குத்தாக நடவு செய்தால், மரம் வளர்ந்த பிறகு, நிறைய பொந்துகள் உருவாகும். அதனால் படுக்கை முறையில் பதியன் போட்டால், இந்த பிரச்னையைத் தவிர்க்கலாம்.

            * 6 அடி நீளம், அரை அடி ஆழத்தில் குழி எடுக்க வேண்டும். இதில் முக்கால் பங்கு மணலையும், காய்ந்த சாணத்தையும் போட்டு, 6 அடி நீளம் கொண்ட போத்துகளை பதித்து, மண்ணால் மூடி, காற்றுப் போகாமல் மிதித்து, தண்ணீர் தெளிக்க வேண்டும். நன்கு வளரும் வரை தண்ணீர் நன்றாக ஊற்ற வேண்டும்.

            * நடவு செய்த ஆறு மாதங்களுக்குப் பிறகு, தண்ணீர் தேவை குறைவாக இருக்கும். ஆண்டுக்கு ஒரு முறை மரங்களை கவாத்து செய்ய வேண்டும். வேறு பராமரிப்புகள் தேவையில்லை.

நோய் தடுக்கும் முறைகள் :

                 * இந்த மரத்தில் நோய் தாக்குதல் குறைவாக இருக்கும்.

மருதாணி மரம் பொதுப்பண்புகள் | பயன்கள் | வளர்ப்பு முறைகள் | நோய் தடுக்கும் முறைகள்

கருத்துகள் இல்லை