* மரத்தின் பெயர் : ரப்பர் மரம்
* தாவரவியல் பெயர் : ஹீவியா பிரேசிலியன்சிஸ்
* ஆங்கில பெயர் : Rubber Tree
* மண் வகை : கரிசல் மண்ணில் வளரும் மரம்
* தாவர குடும்பம் : இயுஃபோர்பியேசியே
பொதுப்பண்புகள் :
* தாவரங்கள் தங்களிடமிருந்து வண்ணப்பசை, எண்ணெய், கோந்து, குங்கிலியம், பால் போன்ற பலவிதமான திரவப் பொருள்களை வெளிப்படுத்துகின்றன. அவற்றில் ஒன்றுதான் ரப்பர் பால்.
* ரப்பர் பால் என்பது கோந்து, எண்ணெய், புரோட்டீன், அமிலங்கள், உப்புகள், சர்க்கரை, ஹைட்ரோ கார்பன் முதலியவை கலந்ததுதான்.
* ரப்பர் பாலுக்கு லாடெக்ஸ் என்று பெயர். ரப்பர் பாலின் நிறம் வெள்ளைதான் என்றாலும், பருவ காலத்துக்குத் தகுந்தாற்போல் அது மஞ்சளாகவும் வெளிர் ஆரஞ்சாகவும், சாம்பல் நிறத்திலும் இருக்கும்.
* ரப்பர் மரம் 18 முதல் 30 மீட்டர்கள் உயரம் வரை வளரும். 2 முதல் 3 மீட்டர்கள் சுற்றளவு இருக்கும்.
* வளர்ந்து 7வது வருடத்திலிருந்து பலன் தர ஆரம்பிக்கும். அதிலிருந்து சுமார் 50 வருடங்களுக்கு ரப்பர் பால் சேகரிக்கலாம். ஒரு வருடத்தில் ஒரு மரத்தில் 150 வெட்டு வாய்களை உண்டாக்கலாம்.
* அடி மரத்தின் மேலும் கீழும் சுமார் 35 செ.மீ. விட்டுவிட்டு மற்றப் பகுதிகளில் இந்தக் கீறல்களை உண்டாக்கலாம்.
* 10 வருடங்களில் அதன் பட்டை மறுபடியும் வளர்ந்துவிடும். ஒரு கூரிய கத்தியால், சுமார் 1.25 செ.மீ. கனத்துக்கு ரப்பர் மரத்தின் பட்டை அகற்றப்பட்டு அதில் ஓர் உலோகக் கிண்ணம் பொருத்தப்படுகிறது. அதில் பால் வடிகிறது.
* சேகரிக்கப்பட்ட பால், நீர் நீக்கப்பட்டு உறைய வைக்கப்பட்டுப் பதப்படுத்தப்படுகிறது.
பயன்கள் :
* பென்சில் கோடுகளை அழிக்க ரப்பர் பயன்படுகிறது.
* ரப்பரைப் பயன்படுத்தி மழைக்கோட்டு தயாரிக்கலாம்.
* ரப்பர் மர பட்டையில் இருந்து எடுக்கப்படும் பால் ரப்பர் பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.
* காலனிகள், விளையாட்டு பொருட்கள் மற்றும் பொம்மைகள் தயாரிக்க பயன்படுகிறது.
* டயர் தயாரிக்க ரப்பர் பால் பயன்படுகிறது.
வளர்ப்பு முறைகள் :
* பெரும்பாலும் ரப்பர் மரம் நடப்படுகிறது அல்லது விதைக்கப்படுகிறது. சில வேளைகளில் முளைக்காமல் போய்விடுகின்றன.
* மரத்தின் ஒட்டுண்ணிகள் இதற்கு முக்கிய காரணமாகும். மேலும் பகுதி நிழல்படுமாறு இருந்தால் நன்றாக வளரும். மேலும் இளஞ்செடிகள் மற்றும் இளம்மரங்களின் மேம்ப்பட்டை உரிந்து விடாமல் பாதுகாக்க வேண்டியது அவசியம். இல்லையெனில் மரத்தின் கூட்டை வெளித்தெரிந்து மரம் காய்ந்து போவது உண்டு.
* பாத்திகளில் விதைத்து மூன்று மாதங்களுக்குப் பின் இடமாற்றம் செய்ய வேண்டும்.
* நாற்றுகள் 10-12.5 செ.மீ உயரமும் ஆணிவேர் 15 செ.மீ. முதல் 20 செ.மீட்டர் நீளம் உள்ள நாற்றுகளை ஒராண்டிற்குப் பின் நடவுக்குப் பயன்படுத்தலாம்.
* பாதுகாத்து வைப்பதில் இளம் அடிப்பாக நாற்றுக்களை விட சற்று வயது முதிர்ந்த மரங்களின் அடிப்பாக நாற்றுகள் சிறப்பானவை.
* வேர்களைத் துண்டுகளாக்கியும் நடவிற்குப் பயன்படுத்தலாம்.
* வேர்மூலம் செடிகள் நன்றாக வளரக்கூடியவை.
நோய் தடுக்கும் முறைகள் :
* சில வகை நோய் கடத்தும் பூச்சிகள் மிகுந்த பாதகமான முடிச்சு நோய்களை உண்டுபண்ணுகின்றன.
* பைட்டோபிளாஸ்மா நுண்ணுயிர்களால் முடிச்சு நோய் ஏற்படுகிறது. இதனால் இலைகள் சுருண்டு விடுவதால் ஒளிச்சேர்க்கை பாதிப்படைகிறது. நோய்க்கடத்திப் பூச்சிகளால் ஒரு மரத்திலிருந்து மற்றொன்றிற்கு நோய் கடத்தப்படுகிறது.
* இலை முடிச்சு நோயை கட்டுப்படுத்த வேப்பங்கொட்டை கரைசலை தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.
கருத்துகள் இல்லை