* மரத்தின் பெயர் : நுணா மரம்
* தாவரவியல் பெயர் : மொரிண்டா கொரியா
* ஆங்கில பெயர் : Aal, Indian mulberry
* மண் வகை : கரிசல் நிலங்களில் வளரும் மரம்
* தாவர குடும்பம் : ரூபியேசி
* மற்ற பெயர்கள் : மஞ்சணத்தி, மஞ்சள்நாறி
பொதுப்பண்புகள் :
* நுணா அல்லது மஞ்சணத்தி அல்லது மஞ்சள்நாறி மரம் ஒருவகை மூலிகை சிறுமரமாகும்.
* இது விதைகள் மூலம் இனப் பெருக்கம் செய்கிறது.
* சுமார் 15 அடி உயரம் வரை வளரும். தடிப்பான பட்டையும், இதிரடுக்கில் அமைந்த இலைகளையும், நாற்கோண சிறு கிளைகளையும் சிறிய வெண்ணிற மலர்களையும் முடிச்சு முடிச்சாகக் காய்களையும் கருப்பு நிறப் பழங்களையும் உடைய மரம்.
* மரத்தின் உட்புறம் மஞ்சள் வண்ணமாயிருக்கும். நுணா மரம் இருந்தால், அதிக ஈரப்பதம் அம்மண்ணில் உள்ளதை அறியலாம்.
பயன்கள் :
* நுணா மரம் இலேசானது என்றாலும் நாரோட்டம் இருப்பதால் வலிமையானது. நீர் இறைக்கும் கபிலை ஏற்றத்தில் எருதுகளின் கழுத்தில் பூட்டப்படும் நுகம் இந்த மரத்தில் செய்யலாம்.
* படுக்க உதவும் கட்டில் கால்கள் இம்மரத்தில் செய்யலாம்.
* இலைச்சாறு, நாட்பட்ட புண்களையும் குணப்படுத்தும்.
* இலையிலிருந்து ஒருவித உப்பு தயாரித்து, நாட்பட்ட புண்களுக்கு மருந்தாகவும் உபயோகிக்கலாம்.
* நுணா பட்டை தைலத்தால் காய்ச்சல், முறை காய்ச்சல், குன்மம், புண், அரையாப்பு, கழலை முதலியவை குணமாகும்.
* நுணாக்காயை முறைப்படி புடம்போட்டுப் பொடித்து, பல்துலக்கினால், பல் சொத்தை, பல்லரணை ஆகியவை நீங்கும்.
* காயைப் பிழிந்து சாறெடுத்து தொண்டையில் பூச, தொண்டை நோய் நீங்கும். பழத்தைப் பக்குவப்படுத்தி, சீதக்கழிச்சல் மற்றும் ஆஸ்துமாவிற்குக் கொடுக்கலாம்.
* வேரிலிருந்து நீர் மூலமாக வடித்தெடுத்த சத்து, இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
கருத்துகள் இல்லை