* மரத்தின் பெயர் : துறிஞ்சி மரம்

           * தாவரவியல் பெயர் : அல்பைசியா அமாரா

           * ஆங்கில பெயர் : Krishna Siris, Oil cake tree

           * தாயகம் : இந்தியா, இலங்கை

           * மண் வகை : செம்மண், சரளை மண், மணற்பாங்கான செம்மண் ஆகியவற்றில் வளரும் மரம்

           * தாவர குடும்பம் : பபேசியே

           * மற்ற பெயர்கள் : ஊஞ்ச மரம், கருவாகை

பொதுப்பண்புகள் :

            * கடல் மட்டத்தில் இருந்து 900மீ உயரமும், மலைப்பாங்கான இடத்திலும் வளரும் தன்மையைக் கொண்டது.

            * அகன்ற கிளைகளை உடைய இலையுதிர் மரமாகும்.

            * மரம் அடர் பச்சை நிறமாகவும், பூக்கள் மஞ்சள் நிறமாகவும், அல்லது வெளிர் பச்சை நிறமாகக் காணப்படும்.

            * முதிர்ந்த நெற்று வெளிர்பச்சை நிறமுடனும், 6-8 விதைகள் கொண்டிருக்கும்.

            * 30-42.5 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையிலும், சமவெளி நிலப்பகுதியிலும் நன்கு வளரக்கூடியது.

            * வறட்சி தாங்கி வளரும் தன்மையற்ற ஒளி விரும்பி மரமாகும்.

பயன்கள் :

           * இலைகள் கால்நடைகளுக்கு நல்ல பசுந்தீவனமாகும்.

           * இலைகள் விவசாயத்திற்கு நல்ல பசுந்தாள் உரமாகப் பயன்படுகிறது.

           * சிறந்த எரிபொருளாகப் பயன்படுகிறது.(5049 கிலோ கலோரி எரிதிறன் கொண்டது.)

           * வீட்டு உபயோகப் பொருட்கள், மற்றும் கட்டிட கட்டுமானப் பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.

வளர்ப்பு முறைகள் :

           * விதை நேரடியாக தாய்பாத்தியில் நடவு செய்யப்படுகிறது.

           * இரண்டு இலைதுளிர்விட்ட நாற்று பாலீத்தின் பைகளுக்கு மாற்றப்படுகிறது.

           * மழை காலங்களில் நடவு செய்யலாம்.

           * நடுவதற்கு முன்பு குழியானது நன்கு வெயிலில் உலர்த்தப்பட்டிருக்க வேண்டும்.

           * குழியின் அளவு 60 கன செ.மீ ஆக இருக்க வேண்டும். ஒவ்வொரு கன்றுகளுக்கும் 3 x 3 மீ இடைவெளி இருக்க வேண்டும்.

           * பாத்தியில் களைகள் வராமல் பர்த்துக்கொள்ள வேண்டும்.

           * கால்நடைகளின் சேதத்தில் இருந்து பாதுகாக்க வேலி அமைக்க வேண்டும்.

           * 25-30 வருடங்களில் அறுவடை செய்யலாம்.

துறிஞ்சி மரம் பொதுப்பண்புகள் | பயன்கள் | வளர்ப்பு முறைகள்

கருத்துகள் இல்லை