* மரத்தின் பெயர் : ஈச்ச மரம்
* தாவரவியல் பெயர் : பீனிக்ஸ் சில்வெஸ்ட்ரிஸ்
* ஆங்கில பெயர் : Silver Date Palm, Indian Date Palm, Sugar Date Palm
* தாயகம் : இந்தியா
* மண் வகை : வறண்டநிலங்களில் வளரும் மரம்
* தாவர குடும்பம் : அரிகேசியே
* மற்ற பெயர்கள் : ஈந்துபனை, காட்டீஞ்சு, ஈச்சம், ஒயில்ட் டேட் பாம், டேட் சுகர் பாம், இண்டியன் ஒயில்ட் டேட், இண்டியன் ஒயின் பாம், சில்வர் டேட் பாம், சுகர் டேட் பாம், சுகர் பாம்
பொதுப்பண்புகள் :
* ஈச்ச மரமானது விதைகள் மூலமே இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன. அதாவது பறவைகள் மற்றும் பிற உயிரினங்கள் மூலம் இதன் விதைகள் பரவுகின்றன. இது வளர்வதற்கு மழைநீர் மட்டுமே போதுமானதாக இருக்கும்.
* ஈச்ச மரத்தில் மூன்று ரகங்கள் உள்ளன. அதாவது உயரமாக வளரும் வகை, நடுத்தர உயரம் வளரும் வகை, மூன்றாவது வகை சிற்றீச்சை அதாவது இரண்டு அல்லது மூன்று அடி உயரம் மட்டுமே வளர்ந்து பின் காய்க்க ஆரம்பிக்கும்.
* பொதுவாக மார்ச் மாதத்தில் பூக்கள் தோன்றி, ஜுன் மாதம் இறுதியில் பழங்கள் கிடைக்கும். தேனீக்கள் மற்றும் சிறு வண்டுகள் மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறும்.
பயன்கள் :
* ஈச்ச மரத்தில் இருந்து கூடைகள், குறிப்பாக துடைப்பம், பாய்கள் போன்றவை தயாரிக்கலாம்.
* இந்த பழம் பேரீச்சம் பழங்களுக்கு நிகரான சத்துக்கள் கொண்டவை. இதில் இரும்பு மற்றும் கால்சியம் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளன.
* ஈச்ச மரத்தில் இருந்து இறக்கப்படும் கள் சுவை மிகுந்ததாகவும், அதிக சத்துகளை கொண்டதாகவும் இருக்கிறது. மேலும் இந்த மரம் இயற்கை விவசாயத்தில் நுண்ணுயிர் பெருக்கத்திற்கு உதவி புரிகிறது.
* மேலும் பறவைகள் கூடு கட்டுவதற்கு தேவையான பஞ்சு போன்ற இழைகள் ஈச்ச மரத்தில் அதிகம் கிடைப்பதால் அந்த மரத்தில் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்கின்றன. அது பறவைகளுக்கு பாதுகாப்பாகவும் அமைகிறது.
வளர்ப்பு முறைகள் :
* ஈச்ச மரம் பொதுவாக நாற்று மூலம் நடவு செய்யப்படுகிறது.
* 20 அடிக்கு ஒன்று வீதம், 500 கன்றுகளை ஒரு ஏக்கருக்கு நடவு செய்யலாம்.
* நடவு செய்யும் முன் உயிர் உரங்களில் நனைத்து நடவு செய்யலாம். இதன் மூலம் ஓரளவு நோய் தாக்குதலிலிருந்து விடுபடலாம்.
நோய் தடுக்கும் முறைகள் :
* ஈச்ச மரத்தை கூன் வண்டுகளே அதிகம் தாக்குகின்றன.
* ஏக்கருக்கு 5 எண்ணிக்கையில் விளக்கு பொறி வைத்து அவற்றை கட்டுப்படுத்தலாம்.
கருத்துகள் இல்லை