* மரத்தின் பெயர் : வாதநாராயண மரம்
* தாவரவியல் பெயர் : டெலானிக்ஸ் எலேட்டே
* ஆங்கில பெயர் : White Gul Mohur, Creamy Peacock Flower or Yellow Gul Mohur
* மண் வகை : செம்மண்ணில் நன்கு வளரும் மரம்
* தாவர குடும்பம் : பபேசியே
* மற்ற பெயர்கள் : ஆதிநாராயணன், வாதரசு, வாதமடக்கி
பொதுப்பண்புகள் :
* வாதநாராயண மர இலைகள், கைப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை.
* இது வெளிர் மஞ்சள் நிறமான கட்டைகளைக் கொண்ட மென்மையான மரம்.
* இலையுதிர்க்கும் வகையைச் சார்ந்தது.
* 20 முதல் 30 அடி வரை வளரும். இரு சிறகாகப் பிரிந்த சிற்றிலைகளைக் கொண்ட கூட்டிலைகளையும், உச்சியில், பெரிய பகட்டான, வெள்ளை மற்றும் மஞ்சளான பூக்களை உடையது.
* தட்டையான, அரை அடி வரை நீண்ட காய்களையும் கொண்டது.
* ஒரு காயில் 10 விதைகள் வரை காணப்படும்.
பயன்கள் :
* இவை, வாத நோய்களைக் குணமாக்கும். பித்த நீரை அதிகரிக்கும், நாடி நடையைப் பலப்படுத்தும், உடல் வெப்பத்தை அதிகரிக்கும். மேலும், வீக்கத்தைக் கரைக்கும்.
* அதிகமாக உட்கொண்டால் கழிச்சலுண்டாக்கும்.
* கிராமங்களில், வேலிகளில், சாலையோரங்களில் வளர்க்கப்படுகின்ற மரம்.
* இலை, பட்டை ஆகியவை மருந்து குணம் கொண்டவை.
கருத்துகள் இல்லை