* மரத்தின் பெயர் : புங்க மரம்

             * தாவரவியல் பெயர் : மில்லெட்டியா பின்னாட்டா

             * ஆங்கில பெயர் : Pungam Tree, Indian Beech Tree

             * தாயகம் : இந்தியா

             * மண் வகை : அனைத்து வகையான மண்ணிலும் வளரும் மரம்

             * தாவர குடும்பம் : பேபியேசியே

பொதுப்பண்புகள் :

             * இந்தியாவில் சாதாரணமாக எங்கும் காணக் கூடிய மரம். இது பெரிய மர வகுப்பைச் சேர்ந்தது.

             * சுமார் 18 மீ. உயரம் வரை வளரும். சமவெளிகளிலும் 3000 அடி உயரமான இடங்கள் வரையிலும் வளரும்.

             * சிறகமைப்புக் கூட்டிலைகளையும், முட்டை வடிவச் சிற்றிலைகளையும், காய்கள் பச்சையாக தட்டையாக இருக்கும்.

             * நன்றாக முற்றியவுடன் லேசான மஞ்சள் நிறமுடைய காய்களின் முனை வளைந்து காணப்படும்.

             * புங்கமரத்தின் பூக்கள் இளஞ்சிவப்பும் வெண்மையும் கலந்த நெற்பொறி போன்று கொத்துக் கொத்தாக இருக்கும். இது கடற்கரைகளிலும், ஆற்றங்கரைகளிலும் தானே வளர்கிறது.

             * இனப்பெருக்கம் செய்ய நன்றாக முற்றிய காய்ந்த விதைகளின் கடினமான மேலோட்டை நீக்கி ஊரவைத்தும் அதன் பருப்பை விதைத்தும், கட்டிங் மூலமும் நாற்றை உற்பத்தி செய்யலாம்.

             * இவைகள் வெளியிலிருந்து வரக்கூடிய கிருமிகளையும், தூசிகளையும் வடிகட்டி நமக்கு சுத்தமான காற்றை அனுப்புகின்றன. சாலையோரங்களில் நிழலுக்காக வளர்க்கப்படுகிறது.

             * ஆக்ஸிஜனை அதிகளவு உற்பத்தி செய்யும் மரங்களுள் மூங்கிலுக்கு அடுத்து புங்க மரம்தான். எந்தப் பகுதியிலும், எத்தகைய சீதோஷ்ண நிலையிலும் வளரக்கூடியவை. அதிக நிழலை தரக்கூடியது.

             * பசுமை படர்ந்த மரமாக காட்சியளிக்கும். இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படும். சாலை ஓரங்களில் நிழல் தரவும், மண் அரிப்பைத் தடுக்கவும் புங்கை மரங்கள் வளர்க்கப்படுகின்றன.

             * புவி வெப்பமயமாதலை தடுக்கும் தன்மையுள்ள மரங்களில் புங்க மரமும் ஒன்று.

பயன்கள் :

             * புங்கமர இலைகளின் சாறு இருமல், சளி, பேதி, வயிற்றுப் பொருமல், பசியின்மை போன்றவற்றைப் போக்கும்.

             * புங்கமர விதைகள் தோல் வியாதிகளை அகற்றும்.

             * புங்கமர வேர்கள் பற்கள் மற்றும் ஈறு சம்பந்தமான நோய்களை குணப்படுத்தும்.

             * புங்கமர மரப்பட்டை மூல வியாதிக்கு சிறந்த மருந்து.

             * புங்கமர பூக்கள் உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.

             * புங்கமர விதையின் பொடி காய்ச்சல், இருமல், நெஞ்சுச் சளியைப் போக்கும்.

             * வித்துகளில் உள்ள எண்ணெய் வாத வியாதிகளுக்கும், மூட்டு வலிக்கும் இந்திய மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

             * புங்க மரத்தின் இலை, பூ, வேர், விதை, எண்ணெய் அனைத்துமே மருத்துவப் பயன் கொண்டது.

வளர்ப்பு முறைகள் :

            * மரங்களை வளர்க்க அவற்றின் மரக்கிளையை 6 அடி அளவிற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

            * ஒரு சாக்குப்பையில் செம்மண் மற்றும் கரம்பை மணலோடு மக்கிய குப்பைகளை கலந்து தண்ணீர் ஊற்ற வேண்டும்.

            * அதற்கு பிறகு 6 அடி உயரமுள்ள மரக்கிளையை அதில் நட வேண்டும். அதன் பிறகு 14-வது நாள் துளிர்க்க ஆரம்பித்துவிடும்.

            * 30-வது நாள் இலைகள் வந்துவிடும். 70-வது நாள் ஒரு மரம் நடவு செய்ய தயாராகிவிடும்.

            * செடி நடவு செய்து, அது மரமாக வளர சில ஆண்டுகளாகும். அதனால், மரக்கிளைகளை வெட்டி, நடவு செய்து மரங்களாக உருவாக்கலாம்.

            * இவ்வாறு செய்வதனால் விதை போட்டு மூன்றாண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகள், மரக்கிளைகளை வெட்டி நட்டால் மரமாக வளர்ந்துவிடும்.

நோய் தடுக்கும் முறைகள் :

             * இந்த மரத்தில் முடிச்சு நோய்கள் அதிகமாக காணப்படுகின்றன.

             * இதனால் இலைகள் சுருண்டு விடுவதால் ஒளிச்சேர்க்கை பாதிப்படைகிறது. நோய்க்கடத்திப் பூச்சிகளால் ஒரு மரத்திலிருந்து மற்றொன்றிற்கு நோய் கடத்தப்படுகிறது.

             * இலை முடிச்சு நோயை கட்டுப்படுத்த வேப்பங்கொட்டை கரைசலை தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.

புங்க மரம் பொதுப்பண்புகள் | பயன்கள் | வளர்ப்பு முறைகள் | நோய் தடுக்கும் முறைகள்

கருத்துகள் இல்லை