* மரத்தின் பெயர் : கல்யாண முருங்கை மரம்

           * தாவரவியல் பெயர் : எரித்ரைனா வேரிகாட்டா

           * ஆங்கில பெயர் : Tigers claw, Indian coral tree, Sunshine tree

           * தாவர குடும்பம் : ஃபேபேசேயே

           * மற்ற பெயர்கள் : முள்முருங்கை, முருக்க மரம், கல்யாண முருக்கன், முள் முருக்கு

பொதுப்பண்புகள் :

           * கல்யாண முருங்கை தமிழகமெங்கும் வேலிகளில் வைத்து வளர்க்கிறார்கள்.

           * மிளகுக் கொடிகளைப் படரவிட இதை வளர்ப்பார்கள். காப்பிப் பயிர்களுக்கு இடையில் நிழலுக்காக வளப்பார்கள்.

           * இது சுமார் 85 அடி உயரம் வரை வளரக்கூடியது. இதன் இலைகள் அகன்றும் பெரிதாகவும் இருக்கும். ஒரு காம்பில் மூன்று இலைகள் காணப்படும். மேல் பகுதியில் ஒன்றும், இரு பக்கமும் இரண்டும் காணப்படும்.

           * இதன் மலர்கள் அதிக சிவப்பாக இருக்கும். இதன் இதழ்களை பெண்களின் உதடுகளுக்கு அக்காலத்தில் உவமையாக ஒப்பிடுவார்கள்.

           * உருட்டு விதைகளையும் முட்களையும் கொண்ட மென்மையான கட்டைகளையும் உடைய மரம்.

           * விதைகள் கருப்பாக இருக்கும். முருங்க மரம் என்றும் வழங்கப்பெறும்.

பயன்கள் :

           * கல்யாண முருங்கை இலைச்சாறு பெண்களுக்கு மாதவிலக்கு நாட்களில் கடுமையான வலியைக் குறைக்கப் பயன்படுகிறது.

           * கல்யாண முருங்கை இலைச்சாறை வெந்நீர் கலந்து பருகினால் கபம், இருமல் நீங்கும்.

           * ஒரு தேக்கரண்டி கல்யாண முருங்கை இலைச்சாற்றை மோரில் கலந்து சாப்பிட்டால் சிறுநீர் கழிப்பதில் ஏற்படும் எரிச்சல் நீங்கும்.

           * கல்யாண முருங்கை இலைசாற்றில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டால் வயிற்று பூச்சிகள் தொந்தரவு கட்டுப்படும்.

           * பெண்கள் கல்யாண முருங்கை கீரையை உணவில் சேர்த்து சாப்பிட்டால் இடுப்பு கொழுப்பு நீங்கி இடை மெலியும்.

           * கல்யாண முருங்கை இலையை ஆமணக்கு எண்ணெய் தடவி இளஞ்சூட்டில் வீக்கம் உள்ள இடத்தில் கட்டினால் வீக்கம் குறையும். மூட்டு வலிக்கு இலையை வதக்கி ஒத்தடம் கொடுக்கவேண்டும்.

           * கல்யாண முருங்கை இலையுடன், ஊற வைத்த வெந்தயத்தை ஒரு ஸ்பூன் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால், உடல் சூடு, வெள்ளைப்படுதல், வெட்டைச்சூடு போன்ற குறைபாடுகள் தீரும்.

          * கல்யாண முருங்கை இலையுடன் கருஞ்சீரகம் சேர்த்து அரைத்துப் பூசினால், படை சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்கள் குணமாகும்.

          * கல்யாண முருங்கை இலை, முருங்கை இலை, மிளகு, பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் இரத்த சோகை குணமாகும்.

வளர்ப்பு முறைகள் :

              * இந்த மரத்தை விதை மூலமாகவோ அல்லது பதியமுறை மூலமாகவோ வளர்க்க முடியும். கிளைகளை நட்டு வளர்ப்பதே பொதுவாகக் கையாளப்படுவதும் இலகுவானதுமான முறையாகும்.

              * கட்டைகளை வெட்டி ஈரத்தில் நட்டால் உயிர் பிடித்து வளரும். விதை மூலமும் இனப்பெருக்கம் செய்யப்படும்.

கல்யாண முருங்கை மரம் பொதுப்பண்புகள் | பயன்கள் | வளர்ப்பு முறைகள்

கருத்துகள் இல்லை