* மரத்தின் பெயர் : தேக்கு மரம்

          * தாவரவியல் பெயர் : டெக்டோனா கிரான்டிஸ்

          * ஆங்கில பெயர் : Teak Tree

          * தாயகம் : தென் கிழக்கு ஆசிய நாடுகள்

          * மண் வகை : செம்மண்ணில் வளரும் மரம்

          * தாவர குடும்பம் : லேமியேசியே

பொதுப்பண்புகள் :

             * உலகில் மதிப்பு வாய்ந்த மர இனங்களில் தேக்கு மரமும் ஒன்றாகும்.

             * தேக்கு மரம் கடல் மட்டத்திலிருந்து 1200 மீ உயரம் வரையிலுள்ள நிலப்பகுதியல் நன்கு வளரும்.

            * ஆண்டு மழையளவு 750 மி.மீ முதல் 2500 மி.மீ.வரை மழை பெறும் இடங்களில் நன்கு வளர்கிறது.

            * இம்மரம் நல்ல வடிகால் வசதியுள்ள ஆற்று வண்டல், மணல் கலந்த நிலங்கள், செம்மண் நிலங்கள், செம்புறை மண் நிலங்கள் மற்றும் மணல் கலந்த களி மண் நிலங்களிலும் நன்கு வளரும்.

            * மண் ஆழம் குறைவாக உள்ள நிலங்களும் நீர்வடியா நிலங்களும் இம்மரம் வளர்ப்பதற்கு ஏற்றதல்ல.

             * இம்மரம் தமிழகம், மத்திய பிரதேசம், ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் வறண்ட பகுதிகளில் கூட வளர்கிறது. கேரளா போன்ற அதிக மழைபெறும் மாநிலங்களில் இம்மரம் நன்கு வளர்கிறது.

            * தேக்கு மரம் இலையுதிர்க்கும் மரவகையை சேர்ந்தது. நவம்பர் முதல் ஜனவரி வரை இலையுதிர்த்து நீண்ட நாட்களுக்கு இலையின்றியே காணப்படும். இம்மரம் நல்ல வலிமையுடைய, கரையான் தாக்காத தன்மையுடையது.

            * மேலும் இம்மரம் ஒளி விரும்பி ஆகும். நல்ல சூரிய ஒளி கிடைத்தால் தான் மரம் நல்ல முறையில் வளரும்.

            * தேக்குமரம் வளரும் இடத்தை பொறுத்து 15 ஆண்டுகளில் சுமார் 15 மீ உயரமும் 90 செ.மீ வரை சுற்றளவும் 30 ஆண்டுகளில் சுமார் 25 மீட்டர் உயரமும், 175 செ.மீ சுற்றளவு வரை வளரும்.

           * தேக்கு நட்ட ஆறு ஆண்டுகளில் பூக்க தொடங்கினாலும் நன்கு பூக்க 15 ஆண்டுகள் தேவைப்படுகிறது.

           * ஜுன் - செப்டம்பர் மாதங்களில் பூக்கத்தொடங்கி மார்ச் - ஏப்ரல் மாதங்களில் விதைகள் முற்றி கீழே விழ ஆரம்பிக்கும்.

பயன்கள் :

            * தேக்கு மரம் ஒரு உயர்தர மரமாக இருப்பதால் அதன் பயன்பாடு மிகவும் அதிகம்.

            * மரச்சாமான்கள் செய்தல், சன்னல், கதவுகள் செய்தல், கட்டில்கள் செய்ய பயன்படுகிறது.

           * கப்பல் கட்டுமானம் மற்றும் அனைத்து கட்டுமான பணிகளுக்கும் தேக்கு மரம் பயன்படுகிறது.

வளர்ப்பு முறைகள் :

            * தேக்கு மர விதைகளை விதை நேர்த்தி செய்வது அவசியமாகும். ஏனெனில் விதையின் உறக்க நிலை காரணமாக முளைப்புதிறன் குறைவாக இருக்கும்.

           * இந்த விதை உறக்க நிலையை நீக்க விதைகளை சாக்குப்பைகளில் நிரப்பி நன்றாக கட்டி சாணப்பாலில் இரண்டு நாட்கள் ஊற வைக்க வேண்டும்.

           * பின்னர் சாணப்பாலிலிருந்து வெளியே எடுத்து இளம் வெயிலில் 12 மணி நேரம் உலர்த்த வேண்டும். மீண்டும் விதைகளை சாணப்பாலில் ஒரு நாள் ஊற வைக்க வேண்டும். பின்னர் சாணப்பாலிலிருந்து வெளியே எடுத்து இளம் வெயிலில் 12 மணி நேரம் உலர்த்த வேண்டும்.

           * மீண்டும் விதைகளை சாணப்பாலில் ஒரு நாள் ஊற வைக்க வேண்டும். இவ்வாறு சுமார் ஒரு வாரம் விதை நேர்த்தி செய்வதன் மூலம் விதைகளின் முளைப்புத்திறன் அதிகரிக்கும். இவ்வாறு விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை தாய்பாத்தியில் விதைக்க வேண்டும்.

நோய் தடுக்கும் முறைகள் :

              * நாற்றங்காலிலுள்ள தேக்கு மர நாற்றுகளை இலையுண்ணிகளான கம்பளி புழுக்கள், பைப்புழுக்கள், வண்டுகள், வெட்டுக்கிளிகள் மற்றும் இலை சுரண்டிகளான சிறிய இளஞ்சிவப்பு புழுக்கள் ஆகியவை தேக்கு தளிர்களையும் இலைகளையும் உண்ணும். மேலும் சாறு உறிஞ்சிகளான அசுவினி, தத்துப்பூச்சி, மாவுப்பூச்சி மற்றும் செதில் பூச்சிகள் இலைகளில் உள்ள சாறுகளை உறிஞ்சும். இதனால் செடிகளின் வளர்ச்சி பாதிக்கப்படும்.

              * மேலும் இப்பூச்சிகளை கட்டுப்படுத்த உயிர்பூச்சிக் கொல்லிகளான பஞ்சகாவ்யா அல்லது வேம்புபால் தெளித்து பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.

தேக்கு மரம் பொதுப்பண்புகள் | பயன்கள் | வளர்ப்பு முறைகள் | நோய் தடுக்கும் முறைகள்

கருத்துகள் இல்லை