* மரத்தின் பெயர் : மாமரம்

          * தாவரவியல் பெயர் : மாஞ்சிபெரா இண்டிக்கா

          * ஆங்கில பெயர் : Mango tree

          * தாயகம் : இந்தியா

          * மண் வகை : அனைத்து வகை மண்ணிலும் வளரும் மரம்

          * தாவர குடும்பம் : அனகார்டேசியே

பொதுப்பண்புகள் :

           * மாமரம் நன்கு அடர்ந்த தழையமைப்புடைய பசுமைமாறா மரமாகும்.

           * கொட்டைக் கன்றுகளின் மரங்கள், நன்கு ஓங்கி உயர்ந்து, பக்கவாட்டிலும் அடர்ந்து வளரும்.

           * ஒட்டுக் கன்றுகள் அதிக உயரமின்றி அடர்ந்து படரும் கிளைகளுடன், தழையமைப்பு அரைவட்ட வடிவத்தில் அல்லது முக்கால் கோள வடிவிலிருக்கும்.

           * பொதுவாக டிசம்பர் மாதத்தில் மாமரம் பூக்கிறது. ஒரு பூங்கதிரில் சராசரியாக ஆயிரம் பூக்கள் இருக்கும். கடற்கரைப் பகுதிகளில், குற்றாலம் போன்ற இடங்களிலும் தட்பவெப்ப சூழ்நிலை காரணமாக,காலமில்லாக் காலங்களில் (Off Season) பூத்துக் காய்ப்பதுண்டு.

           * தமிழரின் முக்கனிகளில் ஒன்று மாம்பழம். காயாக இருக்கும் பொழுது வைட்டமின் சி- யும், கனியாகும் பொழுது கரோடினும் நிறைந்தது.

           * மொத்த உலக உற்பத்தியில் இந்தியாவில் 52.9 % அளவில் மாம்பழங்கள் உற்பத்தியாகிறது. மாம்பழம் முக்கனிகளுள் ஒன்றாகும்.

           * இந்த மரம் புவிமையக் கோட்டுப் பகுதியில் காணப்படுகின்றன. சுமார் 35 சிற்றினங்களைக் கொண்டது.

           * மாம்பழம் உலகெங்கும், குறிப்பாக ஆசியாவில், கோடை காலங்களில் அதிகம் சுவைக்கப்படுகிறது.

           * பழமாகவும், பழரசமாகவும் மட்டுமல்லாது காயாகவும் பல வித உணவு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது.

பயன்கள் :

           * மரத்தை நன்கு உரிக்கலாம். உரித்து, ஒட்டுப் பலகை செய்திட பல இடங்களிலும் உபயோகிக்கப்படுகிறது. மரப்பீப்பாய்கள் செய்யவும் ஏற்றது.

           * நீரிழிவு உள்ளவர்கள், மாவின் கொழுந்து இலையை உலர்த்திப் பொடிச் செய்து தினமும் காலை மாலை 2 ஸ்பூன் அளவு அருந்தினால் நீரிழிவு கட்டுப்படும். தேன் விட்டு வதக்கி குடிநீரில் போட்டு ஊறவைத்து அந்த நீரை அருந்தினால், குரல் கம்மல், தொண்டைக்கட்டு போன்றவை நீங்கும்.

           * தீக்காயம் பட்டவர்கள் மா இலையைச் சுட்டு சாம்பலாக்கி, வெண்ணெயில் குழைத்து பூசி வந்தால் தீப்புண் விரைவில் குணமாகும்.

           * உலர்ந்தப் பூக்களில் டானின் என்கிற சத்து உள்ளது. மாம்பூவைக் குடிநீரில் இட்டுக் குடித்தால் வயிற்றுப்போக்கு, சிறுநீரக நோய்கள், பால்வினை நோய்கள் ஆகியன குணமாகும்.

           * இளம் மாவடுக்களை எடுத்து காம்பு நீக்கி காயவைத்து, உப்பு நீரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து வைத்துக்கொண்டு உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால், ஜீரணச் சக்தி அதிகரிக்கும். வாந்தி, குமட்டல் நீங்கும்.

           * காம்பில் இருந்து வெளிப்படும் பால், படர்தாமரை மற்றும் சொறி சிரங்கு ஆகியவற்றைக் குணமாக்கும்.

           * மாங்காய் பல் ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவையும் ரத்தச் சோகையையும் நீக்கும் திறன் கொண்டது. பாத வெடிப்புகளுக்கு மாங்காயின் சாற்றைப் பூசினால் குணமாகும்.

           * காயின் தோலை அரைத்து ஒரு ஸ்பூன் அளவு எடுத்து மோருடன் கலந்து குடித்துவந்தால் ரத்த மூலமும் வயிற்றுப்போக்கும் தீரும்.

           * மாம்பட்டையை நல்லெண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சிய எண்ணெயைப் பயன்படுத்தித் தலைக்குக் குளித்தால் மேக வியாதி, வெள்ளைப்படுதல், விஷக்கடியால் ஏற்படும் வலி ஆகியன குணமாகும். மரப்பட்டையை ஊறவைத்த குடிநீரைக் கொப்பளிக்கப் பல்வலி நீங்கும்.

           * கால் பித்தவெடிப்பு உள்ள பகுதியில் மாம்பிசினைத் தடவி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

வளர்ப்பு முறைகள் :

           * நல்ல வடிகால் வசதி கொண்ட செம்மண் நிலம் மா பயிர் செய்வதற்கு ஏற்றதாகும். மண்ணின் கார அமிலத் தன்மை 6.5 முதல் 8 வரை இருக்க வேண்டும். மா நட ஜூலை முதல் டிசம்பர் வரை ஏற்ற பருவமாகும்.

           * நிலத்தை நன்கு உழுது பின்பு 1 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலம், 1 மீட்டர் ஆழம் உள்ள குழிகளை செடிகள் நடுவதற்கு 15 நாள்களுக்கு முன்னர் வெட்டி, பின்னர் குழி ஓன்றுக்கு 10 கிலோ தொழுஉரம், 100 கிராம் லின்டேன் உடன் மேல் மண் நன்கு கலக்கப்பட்டு குழியின் முக்கால் பாகம் வரை மூட வேண்டும்.

           * ஓட்டுச் செடிகளை குழிகளின் மத்தியில் நட வேண்டும். செடிக்குச்செடி 6 முதல் 10 மீட்டர் வரை இடைவெளி விட வேண்டும். அடர் நடவு முறையினை அல்போன்சா, பங்கனப்பள்ளி, மல்லிகா போன்ற ரகங்களில் பின்பற்றலாம்.

            * செடிகள், நன்றாக வளரும் வரை அடிக்கடி நீர்ப் பாய்ச்ச வேண்டும். மேலும் பயிறு வகைகள், நிலக்கடலை, காய்கறிகள் போன்றவற்றை ஊடுபயிராகப் பயிரிடலாம். ஒரு மரத்துக்கு ஒரு கிலோ உரமிட வேண்டும்.

           * உரங்களை செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் செடிகளின் வயதிற்கேற்ப செடிகளின் அடிப் பாகத்திலிருந்து 45 முதல் 90 செ.மீ தூரத்தில் இட்டு பின் அவற்றை மூடி நீர்ப் பாய்ச்ச வேண்டும்.

           * ஒரு ஹெக்டருக்கு இட வேண்டிய சத்துக்கள் முதல் வருடத்துக்கு தழை 0.2, மணி 0.2, சாம்பல் 0.3, 6 வருடங்களுக்குப் பிறகு தழை 1, மணி 1, சாம்பல் 1.5. காம்ப்ளக்ஸ் 10:26:26 அளவிலும் இட வேண்டும்.

           * வருடத்துக்கு ஒரு முறை ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நெருக்கமாக உள்ள கிளைகளை வெட்டிவிட்டு ஆரோக்கியமான கிளைகளை மட்டும் வளரவிட வேண்டும். பிஞ்சுகள் உதிர்வது தடுக்கப்பட்டு காய்ப்பிடிப்பு அதிகரிக்க வளர்ச்சி ஊக்கி மருந்தை நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

          * ஆடி, ஆவணி முதல் மார்கழி மாதம் வரை நடவு செய்யலாம். நடவு செய்வதற்கு ஒட்டுக்கன்றுகளைத் தேர்வு செய்து நட்டால் மூன்றிலிருந்து நான்காண்டுக்குள் மகசூலுக்கு வரும்.

          * பிப்ரவரி மாதத்தில் பூ பூக்காத மரங்களுக்கு பொட்டாசியம் நைட்ரேட் கரைசல் தெளிக்க வேண்டும்.

நோய் தடுக்கும் முறைகள் :

               * அசுவினி செதில் பூச்சி, தண்டு துளைப்பான், பழம் ஈ, சாம்பல் நோய், இலைப்புள்ளி, கரும்பூஞ்சாண் நோய் போன்ற நோய்களுக்கு மருந்துகள் தெளிக்க வேண்டும்.

மாமரம் பொதுப்பண்புகள் | பயன்கள் | வளர்ப்பு முறைகள் | நோய் தடுக்கும் முறைகள்

கருத்துகள் இல்லை