* மரத்தின் பெயர் : விளாமரம்

            * தாவரவியல் பெயர் : லிமோனியா அசிடிசிமா

            * ஆங்கில பெயர் : Vila Tree

            * மண் வகை : அனைத்து வகை  மண்ணிலும் வளரும் மரங்கள்

            * தாவர குடும்பம் : ரூட்டேசியே

பொதுப்பண்புகள் :

            * விளாமரத்தின் கிளை மற்றும் வேர்கள் தடிப்பாகவும் உறுதியாகவும் இருக்கும்.

            * பட்டைகள் கெட்டியாகவும் சொரசொரப்பாகவும் இருக்கும்.

            * பழம் புளிப்புக் கலந்த இனிப்பாக இருக்கும்.

பயன்கள் :

           * ஒவ்வாமை நோய், இரத்த போக்கு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும்.

           * மார்பகம், கர்ப்பப்பையில் புற்றுநோய் வராமல் தடுக்கும்.

           * பழம் வலி நிவாரணியாகச் செயல்படுகிறது. தின்பண்டமாகவும், பித்த நோய்களைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது.

          * பித்த கொதிப்பைத் தணிக்க இதன் இலை பயன்படுகிறது.

          * பட்டையால் குழந்தை பிரசவித்த பெண்களின் வயிற்று உள்ளுறுப்புகளுக்குச் சக்தி கிடைக்கும்.

          * கொழுந்திலையை நீரில் இட்டு குடிக்க வாயுத் தொல்லை நீங்கும்.

வளர்ப்பு முறைகள் :

            * மரங்களை வளர்க்க அவற்றின் மரக்கிளையை 6 அடி அளவிற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

            * ஒரு சாக்குப்பையில் செம்மண் மற்றும் கரம்பை மணலோடு மக்கிய குப்பைகளை கலந்து தண்ணீர் ஊற்ற வேண்டும்.

            * அதற்கு பிறகு 6 அடி உயரமுள்ள மரக்கிளையை அதில் நட வேண்டும். அதன் பிறகு 14-வது நாள் துளிர்க்க ஆரம்பித்துவிடும்.

            * 30-வது நாள் இலைகள் வந்துவிடும். 70-வது நாள் ஒரு மரம் நடவு செய்ய தயாராகிவிடும்.

            * செடி நடவு செய்து, அது மரமாக வளர சில ஆண்டுகளாகும். அதனால், மரக்கிளைகளை வெட்டி, நடவு செய்து மரங்களாக உருவாக்கலாம்.

            * இவ்வாறு செய்வதனால் விதை போட்டு மூன்றாண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகள், மரக்கிளைகளை வெட்டி நட்டால் மரமாக வளர்ந்துவிடும்.

நோய் தடுக்கும் முறைகள் :

              * இதில் நோய் தாக்குதல் குறைவு. இலைப்புள்ளி நோய் மரக்கன்று வளரும் ஆரம்பகாலத்தில் மட்டும் காணப்படும்.

              * வேப்பங்கொட்டை கரைசலை பயன்படுத்தி இந்த நோயைக் கட்டுப்படுத்தலாம்.

விளாமரம் பொதுப்பண்புகள் | பயன்கள் | வளர்ப்பு முறைகள் | நோய் தடுக்கும் முறைகள்

கருத்துகள் இல்லை