* மரத்தின் பெயர் : வெக்காளி மரம்

           * தாவரவியல் பெயர் : அனோஜிசிஸ் லாட்டிபோலியா

           * ஆங்கில பெயர் : Axlewood tree

           * தாயகம் : இந்தியா, நேபாளம், மியான்மர் மற்றும் இலங்கை

           * மண் வகை : அனைத்து வகை  மண்ணிலும் வளரும் மரங்கள்

           * தாவர குடும்பம் : காம்ப்ரிடேசியே

பொதுப்பண்புகள் :

              * வெக்காளி மரம் சராசரி அளவுடைய பெரிய இலையுதிர் மரமாகும்.

              * வெளிர் சாம்பல் நிறமுடைய மென்மையான மரப்பட்டையும், அடுத்தடுத்து அமைந்துள்ள அடர் பச்சை நிற இலைகளையும் கொண்டது.

             * காய் மஞ்சள் கலந்த சாம்பல் நிறத்திலும், ஆப்பு வடிவத்திலும் இருக்கும்.

            * ஒரு கிலோ விதையில் 1 இலட்சம் விதைகள் இருக்கும்.

            * 38-45 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் நன்கு வளரும்.

            * கடல் மட்டத்தில் இருந்து 1200 மீ உயரமுள்ள இடத்தில் வளரும் தன்மையைக் கொண்டது.

            * வறட்சி தாங்கி வளரும் ஒளி விரும்பி மரமாகும்.

பயன்கள் :

            * இலைகள் கால்நடைகளுக்கு நல்ல பசுந்தீவனமாகும்.

            * இலைகள் டஸார் பட்டுபுழு வளர்ப்பிற்கு தீவனமாகப் பயன்படுகிறது.

            * இந்த மரம் வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் வேளாண் உபகரணங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.

           * கட்டுமானப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.

           * சிறந்த எரிபொருளாகப் பயன்படுகிறது.

வளர்ப்பு முறைகள் :

           * நேரடி நடவு முறை, நற்றங்கால் விதைப்பு மூலம் நடவு செய்யப்படுகிறது.

          * விதைகள் தாய் பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது.

          * டிசம்பர் மாதம் விதைகள் சேகரிக்கப்பட்டு காயவைக்கப்படுகிறது.

          * விதை 8 மாதம் வரை முளைப்பு திறன் பெற்றிருக்கும்.

          * குளிர் நீரில் 48 மணி நேரம் ஊர வைத்து நேர்த்தி செய்யப்பட்ட பிறகு நடவு செய்யப்படுகிறது.

          * தாய் பாத்தியினை வைக்கோல் கொண்டு மூட வேண்டும்.

          * நடவு செய்து 7 நாட்களில் முளைக்கின்றது.

          * நடவு செய்ததில் இருந்து பாத்தியில் களைகள் வளராமல் பர்த்துக்கொள்ள வேண்டும்.

          * தினமும் பூவாளி கொண்டு தண்ணீர் தெளிக்க வேண்டும்.

          * நாற்று இரண்டு இலைகள் விட்ட பிறகு வளர் ஊடகம் நிரப்பப்பட்ட பாலீத்தின் பைகளுக்கு மாற்ற வேண்டும்.

          * குழியின் அளவு 30 கன செ.மீ அல்லது 45 கன செ.மீ ஆக இருக்க வேண்டும்.

         * ஒவ்வொரு கன்றுகளுக்கும் 3 x 3 மீ மற்றும் 5 x 5 மீ இடைவெளி இருக்க வேண்டும்.

         * இந்த மரத்தை 10-15 மாதங்களில் அறுவடை செய்யலாம்.

வெக்காளி மரம் பொதுப்பண்புகள் | பயன்கள் | வளர்ப்பு முறைகள்

கருத்துகள் இல்லை