* மரத்தின் பெயர் : இளஞ்சிவப்பு நிற வசந்த ராணி மரம்
* தாவரவியல் பெயர் : தெபுபியா ரோசியா
* மண் வகை : அனைத்து வகை மண்ணிலும் வளரும் மரம்
பொதுப்பண்புகள் :
* இந்த மரமானது 25 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய பெரிய இலையுதிர் மரமாகும். இதனுடைய பூக்கள் பழுப்பு நிறம் கலந்த வெளிர் சிவப்பு நிறமுடையது.
* இதன் காயானது இறகு போன்ற விதைகளை கொண்டது.
* இந்த மரமானது 1,250 மீட்டர் வரை வளரக்கூடியது.
பயன்கள் :
* இம்மரமானது மிகவும் அழகிய பூக்களை பூக்கும் தன்மை கொண்டது.
* அலங்கார மரமாக வளர்க்கப்படுகிறது.
வளர்ப்பு முறைகள் :
* சாதகமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது. நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடவு செய்யலாம்.
* விதைக்கப்பட்டதிலிருந்து ஒரு வாரத்தில் விதைகள் முளைக்க துவங்குகிறது. 3 வாரத்தில் முற்றிலும் முளைத்து விடுகிறது.
* மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
* குழியின் அளவு 45 செ.மீட்டர் என இருக்க வேண்டும்.
* 45-60 செ.மீட்டர் உயரம் வளர்ந்த நாற்று நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
* இம்மரம் அழகிய மலர்களை பூக்கவல்லது. எனவே அலங்கார மரமாக வளர்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை