* மரத்தின் பெயர் : பலாமரம்

         * தாவரவியல் பெயர் : அர்டோகார்பஸ் ஹெட்டிரோபில்லஸ்

         * ஆங்கில பெயர் : Jackfruit tree

         * தாயகம் : இந்தியா

         * மண் வகை : ஈரப்பதம் அதிகமுள்ள பூமத்தியரேகைப்பகுதிகளில் மட்டுமே வளரும் மரம்

         * தாவர குடும்பம் : மோரேசி

         * மற்ற பெயர்கள் : சக்கப்பழ மரம்

பொதுப்பண்புகள் :

           * தமிழ் மக்களின் முக்கனிகளில் ஒன்றெனப் பெருமையுடையது பலாமரம்.

           * மேற்குத் தொடர்ச்சி மலையில் 1200 மீட்டர் உயரம் வரையுள்ள பசுமை மாறாக் காடுகளில் காணப்படும் மரமாகும். வடக்கே அஸ்ஸாமிலும் பீகாரிலும் அதிகமாக உள்ளன.

          * பலா ஒரு பசுமை மாறா மரம், வறண்ட இடங்களிலும் கூட, முழுமையாக இலையுதிர்த்திடாது.

          * ஓங்கி உயர்ந்து 10-20 மீட்டர் வரை வளரக்கூடியது.

          * ஈரச் செழிப்புள்ள மணற்பாங்கான நிலங்களிலும் மலைச் சரிவுகளிலும் உயர்ந்து வளரும்.

          * மரத்தில் விளையும் பழங்களிலேயே பெரிய பழம் பலாப்பழமாகும்.

          * சில இடங்களில் மட்டுமே இது முறையான விவசாய முறைகளின் படி முழுமையான தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. பெரும்பாலும் மற்ற பழத்தோட்டங்களில் துணைப்பயிராகவோ அல்லது வீட்டுத்தோட்டங்களிலோ வளர்க்கப்படுகிறது. பழங்களின் அரசன் என்று போற்றப்படும் பலா சில இடங்களில் பயன்படுத்தப்படாமல் குப்பையில் வீசப்படுகிறது.

          * உறைபனியைத் தாங்கும் சக்தி பலாமரத்திற்கு இல்லை.

          * இந்தியாவில், பலா மரங்கள் கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரம் வரையிலான இடங்களில் கூட காணப்படுகின்றன.

          * ருசி மிக்கக் கனிகளைத் தருவதுடன் ஆடுகளைக் கொழுக்க வைக்கும் தழையையும் தருகிறது. இசைக் கருவிகளுக்கான மரம், கறியாகச் சமைத்திடப் பிஞ்சு மற்றும் விதை, மருத்துவப் பயனுடைய பல்வேறு பகுதிகள் ஆகிய அனைத்தையும் உடையது.

பயன்கள் :

           * பலாமர தழை கால்நடைகளுக்குத் தீவனமாகும்.

           * பலாக்கனியில் 29% அளவில் உண்ணக்கூடிய சுளைப் பகுதி 12% அளவில் விதை 59% அளவில் மேல் தோலுடன் கூடிய சக்கைப் பகுதி ஆகியவை உள்ளன. பலாச் சுளைகளை நேரடியாக உண்பதுடன் சிரப், ஜாம், ஜெல்லி முதலியனவும் செய்திடலாம்.

           * பலாத் தோல்ச் சக்கையும் பயனுடையதே. இதிலிருந்து 0.03% நறுமணமுடைய உலர்தைலம் தயாரிக்கலாம்.

           * பலாக்கொட்டை நல்லதொரு உணவாகும். மலைவாசிகள் கொட்டையை மாவாக்கி உண்பர்.

           * பலாவின் காயிலிருந்தும் மரத்திலிருந்தும் பால் எடுக்கலாம். மரத்துப் பாலிற்கு பாக்டீரியக் கிருமிகளைத் தடுக்கும் திறன் உள்ளது. அதிலும் குச்சிகளின் பாலில் இத்திறன் நான்கு மடங்காக உள்ளது.

            * வேரில் பீடா-ஸ்டிரோஸ்பிரால், அர்சோலிக் அமிலம், பெடுலினிக் அமிலம், ஸைகிளோ ஆர்பினோன், ஆர்டோஃபிளேவானோன் உள்ளது.

            * வயதான மரங்களின் வேர்களைக் கொண்டு படச் சட்டங்கள் தயாரிக்கின்றனர்.

            * மரம் வீணை, தம்புரா முதலிய இசைக் கருவிகள் செய்ய மிகவும் ஏற்றது. மேஜை, நாற்காலிகள் செய்ய மஹோ கனியைப் போன்று சிறந்ததாகும். கட்டிடச் சாமான்கள் செய்யலாம்.

            * பலாவின் இலை, காய், பழம், விதை, பால், வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.

            * காபித்தோட்டங்களில் நிழல் மரமாகப் பயிரிட ஏற்றதாகும்.

வளர்ப்பு முறைகள் :

           * பலாமரம் ஈரப்பதம் அதிகமுள்ள பூமத்தியரேகைப்பகுதிகளில் மட்டுமே வளரக்கூடியது. மழை குறைவாக இருப்பின், நீர்ப்பாசனம் செய்ய வேண்டியது அவசியமாகும்.

           * நல்ல வடிகால் வசதியுள்ள மண்ணில் பலா நன்றாக வளரும். சுண்ணாம்பு பாங்கான நிலத்தில் சற்று மெதுவாகத்தான் வளரும். வேர்ப்பகுதியில் நீர் தேங்குவது பலா மரத்திற்கு உகந்ததல்ல. இதனால் மரங்கள் பழம் தராமலோ வாடியோ போய்விடும்.

          * பலா சாதாரணமாக விதை மூலமே வளர்க்கப்படுகிறது. நீரில் ஊர வைப்பதன் மூலம் விதைகள் விரைவாக முளைக்கும். விதைகளை நிலத்தில் நேரடியாக நடாமல், நாற்றங்காலிலும் நடலாம். ஆனால், நாற்றுகளை விரைவில் நடாவிட்டால் அவை நாற்றங்காலிலேயே வேர் பிடித்து விடும்.

          * பலவிதமான ஒட்டு முறைகளில் பலாச்செடிகள் உருவாக்கப்பட்டாலும், அவை விதைசெடிகள் அளவு பிரபலமடையவில்லை. எனினும், காற்றில் வேர் பிடிக்கச்செய்தல், சிறு தண்டுகளை வேர் பிடிக்கச்செய்தல் ஆகிய முறைகள் மூலம் பலாச்செடிகள் உருவாக்கப்படுகின்றன. திசு வளர்ப்பு முறையிலும் பலாச்செடிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

          * பொதுவாக, பலாச்செடிகள் 3 – 7 வருடம் முதல் காய்க்கத் தொடங்கும்.

          * பலாமரம் ஆண் பூ, பெண் பூ என இருவகை பூக்கள் கொண்டது. ஆண் பூக்கள் கொத்தாக புதிய கிளைகளிலும், பெண் பூக்கள் கொத்தாக மரத்தண்டிலும், தடிமனான கிளைகளிலும் காணப்படுகின்றன. பூ பூத்த 3-8 மாதங்களில் பலாக்காய்கள் முற்றுகின்றன.

          * ஆசியாவில் பலாப்பழங்கள் முற்றும் காலம் மார்ச் முதல் ஆகஸ்ட் வரை ஆகும். ஒரு மரத்திலிருந்து ஆண்டுக்கு 100 - 150 பழங்கள் வரை கிடைக்கும்.

          * பழங்கள் காம்பை அறுத்து மரத்திலிருந்து பறிக்கப்படுகின்றன. வெகுவாக பால் சிந்தினால் அது நன்கு முற்றாத பலாக்காய் என அறியலாம். நன்கு முற்றிய பலாக்காய்கள் சுமார் 40 கிலோ வரை எடை உடையவையாய் இருக்கும்.

          * பழத்தின் வெளிப்புறம் தடிமனான முட்களுடையதாயும், பச்சை நிறத்திலும் இருக்கும். உட்புறம் மஞ்சள் நிற சுளைகள், வெளிர் மர நிறத்திலான கொட்டைகளுடன் இருக்கும்.

பலாமரம் பொதுப்பண்புகள் | பயன்கள் | வளர்ப்பு முறைகள்

கருத்துகள் இல்லை