* மரத்தின் பெயர் : ஆலமரம்

             * தாவரவியல் பெயர் : பைகஸ் பெங்காலென்சிஸ்

             * ஆங்கில பெயர் : Banyan Tree

             * தாயகம் : இந்தியா

             * மண் வகை : அனைத்து வகையான மண்ணிலும் வளரும் மரம்

             * தாவர குடும்பம் : மோரேசியே

பொதுப்பண்புகள் :

              * ஆலமரம் 20 முதல் 35 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது.

              * மிகவும் பருத்த அடி மரத்தைக் கொண்டது. அடிமரத்தின் சுற்றளவு 15 மீட்டர் அல்லது அதற்கு மேலும் இருக்கக்கூடும்.

              * கிளைகளிலிருந்து மெல்லிய வேர்கள் தோன்றிக் கீழ்நோக்கி வளர்கின்றன. இவை விழுதுகள் எனப்படும். நாளடைவில் பெருத்த தூண் போல ஆகின்றன.

              * ஆழமாக வேரூன்றி, விழுதுகளைப் பரப்பி வளரும் மரங்களுள் ஆலமரம் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது. இதை ஆல் என்றும் அழைப்பர்.

              * இந்தியாவில் எல்லா பகுதிகளிலும் இயற்கையாக வளர்கிறது. இமயமலைச் சாரலின் சரிவுகளில் இது காட்டு மரமாக வளர்கிறது.

              * சாலை ஓரங்கள், ஆலயங்கள், மேடைக் கோவில்கள் ஆகியவற்றின் அருகிலும் கிராமப் பொது இடங்களிலும் வளர்க்கப்படுகின்றது.

பயன்கள் :

              * படர்ந்த, அடர்த்தியான நிழல் தரும் மிகச்சிறந்த மரமாகச் சாலையோரங்களில் வளர்க்கப்படுகின்றது. இம்மரத்தின் முட்டு வேர்களின் கட்டை உறுதியானது. அது கூடாரக் கம்பங்களாகவும், வண்டிகளின் ஏறுகாலாகவும் பயன்படுகிறது.

              * இதன் பட்டை நாட்டு மருத்துவம், சித்தமருத்துவம் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது.

              * ஆலமரத்துப் பால், இலை, பட்டை, கனிகள், வேர், விழுதுகள் யாவும் மருத்துவப் பொருட்களாகப் பயன்படுகின்றன.

              * இம்மரத்தின் பால் மூட்டுவலிக்குப் பயன்படுகிறது.

              * பட்டை நிரிழிவு நோய் தீர்க்கும்.

              * விழுதுகள் ஈறு நோய்களைப் போக்க வல்லது.

              * ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்ற பழமொழி உண்டு. ஆலமரத்தின் விழுதுகளின் நுனியில் உள்ள குச்சி போன்ற மெல்லிய பகுதியைப் பல் துலக்கப் பயன்படுத்தப் பல் உறுதியாகும்.

             * இலைகள் ஆட்டுக்குத் தீவனமாகக் கொடுக்கப்படுகின்றன.

             * கனிகளைப் பறவைகளும் குரங்குகளும் விரும்பி உண்கின்றன.

வளர்ப்பு முறைகள் :

             * பெரிய மரத்தின் நடுத்தர அளவு உடைய கிளைகளின் மரக்கிளைகளை 6 அடி நீளத்தில் வெட்ட வேண்டும்.

             * ஒரு சிமென்ட் கோணிப்பையில் மண் நிரப்பி வைத்துக்கொண்டு, மரக்கிளையின் பச்சைத்தன்மை மாறுவதற்குள் நட்டு விட வேண்டும்.

             * கால்நடைகளின் சாணம் போன்ற இயற்கை உரங்களே போதுமானது. குறைந்தளவு நீர் ஊற்றிவர வேண்டும்.

             * நடப்பட்ட மரக்கிளையை அசைக்கவோ, மாற்றவோ கூடாது. கால்நடைகள் இலையை மேய்ந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

             * இப்படிப் பராமரித்தால், 30 நாள்களில் தளிர ஆரம்பித்து விடும். 90 நாள்களிலிருந்து நிழல் கொடுக்கிற அளவுக்கு மரம் வளர்ந்துவிடும்.

நோய் தடுக்கும் முறைகள் :

                     * இதில் நோய் தாக்குதல் குறைவு.

ஆலமரம் பொதுப்பண்புகள் | பயன்கள் | வளர்ப்பு முறைகள் | நோய் தடுக்கும் முறைகள்

கருத்துகள் இல்லை