* மரத்தின் பெயர் : சால் மரம்
* தாவரவியல் பெயர் : சோரியா ராபஸ்ட
* ஆங்கில பெயர் : Sal Tree
* தாயகம் : இந்தியா
* மண் வகை : மலைப்பகுதி, ஆறுகளின் சமவெளிப்பகுதியில் வளரும் மரம்
* மற்ற பெயர்கள் : வெண்குங்கிலியம்
பொதுப்பண்புகள் :
* சால் மரம் இந்தியாவின் கிழக்குப்பகுதி, நேபாளம், மியன்மார், பங்களாதேஷ் ஆகிய இடங்களில் காணப்படுகிறது.
* இது மிதமாக அல்லது மெதுவாக வளரும் மரம் ஆகும்.
* இது 30-ல் இருந்து 35 மீட்டர் உயரம் வரை வளரும்.
* இதன் இலைகள் 10 - 25 செ.மீ நீளமும் 5 - 15 செ.மீ அகலமும் கொண்டவை.
பயன்கள் :
* இது உறுதியாக இருப்பதால் வீட்டு மரச்சாமான்கள் செய்ய உதவுகின்றன.
* மரங்களின் பாலிலிருந்து எடுக்கும் பிசினை தீயிட்டால் எரிந்து புகையாகும். புகை நறுமணம் உடையது.
* கிரேக்கம், ரோமானியம், சீனம், பாரசிகம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் பயன்படுத்தபடுகிறது.
* இது ஊதுபத்தி போன்ற பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.
* இது பொடியாகவும், தைலமாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது.
வளர்ப்பு முறைகள் :
* 10 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலம் மற்றும் 30 செ.மீ உயரமுள்ள தாய்பாத்தி அமைக்க வேண்டும். கரையான் மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்த தாய்பாத்தியின் மீது வேம்பு பால் கரைசலை நன்றாக தெளிக்க வேண்டும்.
* ஒரு அங்குல கனத்தில் குறு மணலை தாய்பாத்தியின் மீது பரப்ப வேண்டும். நேர்த்தி செய்யப்பட்ட சால் விதைகளை ஒரு தாய்பாத்திக்கு 5 கிலோவீதம் விதைகள் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் விதைக்க வேண்டும்.
* விதையின் கனத்திற்கு சலித்த செம்மண் மற்றும் மணல் கலந்த கலவையை தாய்பாத்தியின் மீது தூவி விடவேண்டும். அதன் பின்பு தாய்பாத்தியின் மீது வைக்கோல் அல்லது தென்னங்கீற்றை பரப்பி விடவேண்டும்.
* தாய்பாத்தியின் மீது 15 நாட்களுக்கு பூவாளி மூலம் காலை மாலை இரு வேளை நீர்ஊற்ற வேண்டும். பின்பு 30 நாட்களுக்கு பூவாளி மூலம் தினமும் ஒரு வேளை நீர் ஊற்ற வேண்டும். சால் விதைகள் 10-12 நாட்களில் முளைக்க ஆரம்பித்துவிடும். இந்நிலையில் வைக்கோல் அல்லது தென்னங்கீற்றுகளை தாய்பாத்தியிலிருந்து அப்புறப்படுத்திவிட வேண்டும்.
* செம்மண், வண்டல் மண், மணல் மற்று நன்கு மக்கிய தொழு உரத்தை தனித்தனியாக சல்லடையில் சலித்து நன்றாக கலந்துவிட வேண்டும். அதனோடு 1 பாலித்தீன் பைக்கு (13X25) செ.மீ அல்லது (16X30) செ.மீ. அளவு பாலீத்தின் பைகள் 6 கிராம் அசோஸ்பைரில்லம், 6 கிராம் பாஸ்போ பேக்டீரியம் மற்றும் 35 கிராம் அளவிற்கு மண்புழு உரத்தை நன்கு கலந்துவிடவேண்டும்.
* இம்மண் கலவையை (13X25) செ.மீ. அளவுள்ள பாலீத்தின் பைகள் அல்லது (13X30) செ.மீ. அளவுள்ள பாலித்தீன் பைகளில் நிரப்ப வேண்டும். நாற்றங்காலில் கரையான் மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்த வேம்பு பாலை நன்கு தெளிக்க வேண்டும்.
நோய் தடுக்கும் முறைகள் :
* நாற்றங்காலிலுள்ள நாற்றுகளை இலையுண்ணிகளான கம்பளி, புழுக்கள், வண்டுகள், வெட்டுக்கிளிகள் மற்றும் இலை சுரண்டிகளான சிறிய இளஞ்சிவப்பு புழுக்கள் நாற்றுகளின் தளிர்களையும், இலைகளையும் உண்ணும். மேலும் சாறு உறிஞ்களான அஸ்வினி, தத்துப்பூச்சி, மாவுப்பூச்சி மற்றும் செதில் பூச்சிகள் இலைகளில் உள்ள சாறுகளை உறிஞ்சும். இதனால் செடிகளின் வளர்ச்சி பாதிக்கப்படும்.
* மேலும் இப்பூச்சிகளை கட்டுப்படுத்த உயிர்பூச்சிக் கொல்லிகளான தகசாவ்யா அல்லது வேம்புபால் அல்லது புகையிலை மற்றும் வேம்பு சோப்பு கரைசலை 1 லிட்டர் தண்ணீரில் 30 மி.லி வீதம் கலந்து 15 நாட்களுக்கு ஒரு முறை விசை தெளிப்பான் மூலம் தெளித்து பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
* நாற்றங்காலில் நீர்தேங்கா வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். நீர் தேங்கும்பட்சத்தில் நாற்றுகளுக்கு வாடல் நோய் மற்றும் அழுகல் நோய் உண்டாகும். இந்நோய்களை கட்டுப்படுத்த பஞ்சகாவ்ய கரைசலை மண்ணின் வேர்பகுதிக்கு அருகே ஊற்ற வேண்டும்.
கருத்துகள் இல்லை