* மரத்தின் பெயர் : குரங்கு பலா மரம்
* தாவரவியல் பெயர் : அர்டோகார்ப்பஸ் லக்கூச்சா
* ஆங்கில பெயர் : Monkey Jack Tree
* தாயகம் : இந்தியா
* தாவர குடும்பம் : மோரேசி
* மற்ற பெயர்கள் : இலகுசம், இராப்பலா, சோலைப் பாக்கு, டினிப்பலவு, பதார், சுரப்பனாஸ், சிம்பா, லக்கூச்சம், புளிஞ்சக்கா
பொதுப்பண்புகள் :
* குரங்குப்பலா, வெப்ப மண்டலம் மற்றும் மித வெப்ப மண்டலப் பகுதிகளுக்கு ஏற்றது.
* புதிதாக விதைகளை எடுத்தவுடன் விதைக்க வேண்டும்.
* ஒரு பழத்தில் 20 முதல் 30 விதைகள் உள்ளன.
* ஒடைக்கரைகளில், இந்த மரங்களை வளர்க்கலாம். இளம் செடிகளை சூரியனின் வெப்பத்திலிருந்து பாதுகாக்க வேண்டும்.
பயன்கள் :
* மனிதர்களின் இதயநோய், சக்கரை நோய் மற்றும் புற்றுநோயை குணப்படுத்தும் மூலிகைப்பழ மரம் இது.
* இதன் பழங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை.
* குரங்குப்பலா பழங்களில் விட்டமின்கள் அதிகம் உள்ளன. அதிலும், குறிப்பாக ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்த விட்டமின் சி மற்றும் பீட்டா காரோட்டீனும் உள்ளன. அத்துடன், துத்தநாகம், தாமிரம், மாங்கனீஸ் மற்றும் இரும்பு ஆகிய தாதுஉப்புக்களும் நிறைந்திருக்கின்றன.
* தோலின் நிறத்தை வெண்மையாக மாற்றும் சக்தியும் இதில் அதிகம் உள்ளன. இதன் இலைகள் கால்நடைகளுக்கு அரிய தீவனம். கால்நடைகள் விரும்பிச் சாப்பிடுகின்றன.
* இந்த மரத்தின் பழங்களைச் சாப்பிட்டு வருவதால் ஈரலுக்கு புத்துணர்ச்சி ஊட்டுகிறது.
* பட்டைச் சாற்றைப் பயன்படுத்தி சருமத்தில் ஏற்படும் சிராய்ப்புகளை குணப்படுத்தலாம். பட்டைப் பொடியைப் பயன்படுத்தி கட்டிகள், மற்றும் காயங்களை குணப்படுத்தலாம். விதைகளும், பட்டையும் வயிறு மற்றும் ஈரலில் ஏற்படும் பிரச்சினைகளை சரி செய்யும்.
* இது நல்ல மரக்கட்டை தரும் மரம். எனவே இதன் மூலம் எல்லாவிதமான மரச்சாமான்களும் செய்யலாம்.
கருத்துகள் இல்லை