* மரத்தின் பெயர் : புளு அட்லஸ் செடார் மரம்
* தாவரவியல் பெயர் : செட்ரஸ் அட்லாண்டிகா
* ஆங்கில பெயர் : Blue Atlas Cedar
* தாயகம் : மொராக்கோ
* தாவர குடும்பம் : பைனேசி
* மற்ற பெயர்கள் : அட்லஸ் செடார்
பொதுப்பண்புகள் :
* இந்த புளு அட்லஸ் செடார் 40 மீட்டர் உயரமும், 2 மீட்டர் விட்டமும் உடையதாக, மிக்க குறைவான கிளைகளுடன், குட்டையாக மேல் நோக்கி வளரக்கூடியதாகவும் இருக்கும்.
* இதன் இலைகள் வெளிர் நீல நிறமாகவும், பசுமையாகவும், 2.5 செ.மீ நீளமுடையதாகவும் இருக்கும்.
* ஜூன் முதல் செப்டெம்பர் வரையான மாதங்களில் இதன் காய்கள் வடிவத்தில் உருளை போல 5 முதல் 7 செ.மீ. நீளமாக உருவாகும்.
* அக்டோபர் மாதத்தில் முதிர்ந்து விதைகளை உருவாக்கும்.
பயன்கள் :
* அழகு மரமாக வளர்க்க, கட்டிட கட்டுமானங்கள் செய்ய, மேஜை நாற்காலி போன்ற மரச்சாமான்கள் செய்ய இந்த மரம் பயன்படுத்தப்படுகிறது.
* செடார் எண்ணெய் பல்வேறு பொருட்கள் செய்ய பயன்படுத்தப்படுகின்றன.
* மேலும் சில அழகு சாதனப் பொருட்களையும் தயாரிக்க பயன்படுகிறது.
* சோப்புகள், ஷாம்புகள், முகப்பூச்சாக மற்றும் சருமப் பாதுகாப்புகாகப் பயன்படுத்தும் கிரீம்கள் போன்றவை தயாரிக்க இந்த அட்லஸ் செடார் எண்ணெய் உபயோகமாகிறது.
* கொசு, மூட்டைப்பூச்சி, கரப்பான் போன்றவற்றை விரட்டும் பூச்சி விரட்டிகளும் இந்த மரத்திலிருந்து தயார் செய்யப்படுகிறது.
* இவை மட்டுமின்றி, பெண்களின் மாதவிடாய்ப் பிரச்சனைகள், உடல் பருமனாதல், ரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறுகள், மூட்டுவலி, மூட்டுப் பிடிப்பு, மூட்டுவாதம், சுவாசம் மற்றும் நுரையீரல் சம்மந்தப்பட்ட உடல் உபாதைகளையும் சரி செய்வதற்காக அட்லஸ் செடார் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.
கருத்துகள் இல்லை