* மரத்தின் பெயர் : கருங்காலி மரம்
* தாவரவியல் பெயர் : அகேசியா கேட்டச்சு
* ஆங்கில பெயர் : Cutch Tree
* தாயகம் : இந்தியா
* மண் வகை : செம்மண்ணில் வளரும் மரம்
* தாவர குடும்பம் : மைமோசி
* மற்ற பெயர்கள் : ஈட்டி, தோதகத்தி, கரங்காலி, கோடாலி முருங்கை, சுந்தரா, கச்சு, கக்லி, கெம்ப்பு ஜாலி, கெம்ப்பு கக்லி, கய்ரடா ஜாலி, லால் கய்ரா, கதிரா
பொதுப்பண்புகள் :
* கருங்காலி மரமானது அனைத்து பாகங்களிலும் முட்களை கொண்டுள்ளது. அதாவது கிளை, தண்டு, இலை என அனைத்திலும் முட்கள் காணப்படும். இது விலை உயர்ந்த மரமாக கருதப்படுகிறது.
* இந்த மரம் நேரடி விதைப்பின் மூலமே உற்பத்தி செய்யப்படுகின்றது.
* உயரம் : 12 - 15 மீட்டர்.
பயன்கள் :
* கருங்காலி மரமானது பலவகையான பொருட்கள் தயாரிக்கவும், மருந்து தயாரிக்கவும் பயன்படுகிறது. அதாவது இதன் தழைகள் விளை நிலங்களுக்கு உரமாக பயன்படுத்தப்படுகிறது. இதிலுள்ள பசை மூலம் கோந்து தயாரிக்கலாம்.
* இந்த மரமானது கப்பல் கட்ட, மரச்சாமான்கள் (உலக்கை, நாற்காலி) செய்ய பயன்படுகிறது. காகிதம் தயாரிக்க இதன் மரக்கூழும், துணிகளுக்கு வண்ணம் கூட்டவும், விறகாகவும் பயன்படுகிறது.
* இந்த மரத்தின் வேரானது மனிதனின் இரத்தத்தில் இரும்பு சத்தை அதிகரிக்க பயன்படுகிறது. கருங்காலி வேரை எடுத்து சுத்தப்படுத்தி நீரில் ஊற வைக்க வேண்டும். பின்பு அந்த நீரை கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தினால் வயிற்று புண் ஆறும். வயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்கும்.
* நீரழிவு நோயை குறைக்க, பித்தத்தை குறைக்க இந்த மரத்தின் வேர் பயன்படுத்தப்படுகிறது. வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்ற கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது.
* கருங்காலி மரப்பட்டை எடுத்து அதனுடன் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்த்து, கொதிக்க வைத்து வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால் இருமல், சுவாச நோய்கள் நீங்கும். இதை இதய நோயாளிகள் அருந்துவது நல்லது.
* கருங்காலி கட்டையை நீரில் ஊற வைத்து, அந்த நீரை கொண்டு குளித்து வந்தால் உடலில் உண்டாகும் அனைத்து வலிகளும் நீங்கும்.
* நரம்பு தளர்ச்சியை போக்க சிறந்த மருந்தாக இந்த கருங்காலி பட்டையானது உதவுகிறது.
வளர்ப்பு முறைகள் :
* கருங்காலி மரத்தை வளர்க்க, விதையை நாற்று விட்டு 30 செ.மீ வளர்ந்தவுடன் நடவு செய்யலாம்.
* ஆரம்பத்தில் நிழல் தேவைப்படுவதால், பிற செடிகளின் அருகாமையில் நட்டு வளர்ந்ததும், அவற்றை அகற்றி விடலாம்.
* இந்த மரத்தை நடவு செய்ய 6 x 6 மீட்டர் இடைவெளி உகந்தது.
நோய் தடுக்கும் முறைகள் :
* கருங்காலி மரத்திற்கு நோய் தாக்குதல் என்பது மிகக்குறைவு.
கருத்துகள் இல்லை