* மரத்தின் பெயர் : வாழை மரம்
* தாவரவியல் பெயர் : மூசா அக்குமினேட்டா
* ஆங்கில பெயர் : Banana Tree
* தாயகம் : தென்கிழக்கு ஆசியா
* மண் வகை : அனைத்து மண்ணிலும் வளரும் மரங்கள்
* தாவர குடும்பம் : முசேசியே
பொதுப்பண்புகள் :
* ஓர் வித்திலைச் செடியான வாழையில் வேர்த்தொகுதி நார்க்கொத்தைப் போல, ஆழமாகச் செல்லாமல் பரவி நிற்கும்.
* இவை இருவித்திலைச் செடிகளில் உள்ளதைப்போல ஆணிவேரைக் கொண்டிருக்காது.
* இதனால் வலுவான காற்றடிக்கும்போது வாழைச்செடிகள் சாய்ந்துவிடக் கூடியவை.
* வாழை முதன்மையாக அதன் பழங்களுக்காகப் பயிரிடப்படுகிறது. எனினும் சிலவேளைகளில் அலங்காரச்செடியாகவும், நார் பெறுவதற்காகவும், வேறு தேவைகளுக்காகவும் வாழை பயிரிடப்படுகிறது.
* சில இன வாழைகள் 8 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. அதன் பெரிய இலைகள் 3.5 மீட்டர் நீளம் வரை இருக்கும்.
* தண்டுப்பகுதி பெரும்பாலான செடியினங்களில் மண்ணுக்கு வெளியே கதிரவனின் வெளிச்சத்தை நோக்கி வளரும். ஆனால், வாழையில் அது கிழங்கு வடிவில் மண்ணுக்கடியில் மட்டுமே வளர்கிறது.
* வெளியில், செங்குத்தாக வளர்ந்து நிற்கும் தண்டு போன்ற பகுதி இலைக்காம்புகளின் அடிப்பகுதிகள் ஒன்றன்மேல் ஒன்று பற்றி நிற்பதால் உருவாகிய பகுதியாகும்.
பயன்கள் :
* இரவு சாப்பாட்டிற்கு பிறகு ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிட்டு வந்தால் பல் வலி, பல் ஈறு வீக்கம், பல்லில் இரத்தக் கசிவுப் போன்ற நோய்கள் வராது.
* வாழை தண்டு சாறு குடித்து வந்தால் உடல் பெருக்கம் குறையும், உடல் அழகு பெறும்.
* வாழை தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணெயில் குழைத்து தடவினால் தீப்புண், சீழ் வடிதல் மற்றும் காயங்கள் குணமாகும்.
* வாழைப் பட்டையை தீயில் காட்டி சூடேற்றி பிழிந்து காதில் விட்டால் காது வலி குணமாகும்.
* வாழை பூ பொரியல் செய்து சாப்பிடுவதினால் அஜிரணம், நீரிழிவு நோய் குணமாகும்.
* இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், ஹீமோகுளோபினை அதிகரித்து, ரத்த சோகை வராமல் தடுக்கிறது.
* வாழைப் பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்து ரத்த அழுத்தம் வராமல் தடுக்கிறது. அதுபோல மூளையின் செயல்படும் ஆற்றலையும் அதிகப்படுத்துகிறது. மலச்சிக்கலுக்கு வாழைப்பழம் எடுத்துக்கொள்வது நல்ல தீர்வாக அமையும்.
* ஆப்பிளை விட 4 மடங்கு அதிகமான புரோட்டீன் சத்தும், 2 மடங்கு அதிகமான கார்போஹைட்ரேட் சத்தும், 3 மடங்கிற்கு அதிகமான பாஸ்பரஸ், 5 மடங்கு வைட்டமின் ஏ மற்றும் இரும்புச் சத்தும் உள்ளது.
* வாழைப்பழத்தோல் விவசாயத்திற்கு உரமாகவும் பயன்படுத்தப்படுகிறது.
* பாம்பு கடித்தால் முதலில் வாழைச்சாறு பருகினால் நச்சு முறிந்துவிடும்.
* வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.
வளர்ப்பு முறைகள் :
* ஜூன் முதல் ஆகஸ்டு மாதம் வரை ஒரு பருவம், செப்டம்பர் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை ஒரு பருவம், டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை ஒரு பருவம் என வாழைக்கு மூன்று பருவங்கள் உள்ளன. இருப்பினும் ஜூன் மாதத்தில் நடவு செய்த வாழை நல்ல வீரியத்துடன் வேகமாக வளரும்.
* வாழை நடவு செய்யும் முன் நிலத்தில் சணப்பை, தக்கைப்பூண்டு போன்ற பசுந்தாள் உரங்களை பயிரிட்டு பூக்கும் சமயத்தில் மடக்கி உழவேண்டும். பின் நிலத்தை இரண்டு முறை உழுது பிறகு கடைசி உழவிற்கு முன் தொழு உரம் இட்டு நிலத்தை நன்கு உழவேண்டும்.
* 1 அடி நீளம், அகலம், ஆழம் உள்ள குழி எடுத்து, அதில் அரை கிலோ மண்புழு உரம் மற்றும் வேப்பம் கொட்டை கரைசல் 100 மில்லியை இடவேண்டும். பிறகு வாழைக்கன்றை குழியில் வைத்து மண்ணைப் இட்டு நன்றாக மிதித்து விடவேண்டும்.
* ரொபஸ்டா ரகத்திற்கு 6 அடி இடைவெளி, மோரிஸ் ரகத்திற்கு 5.5 அடி இடைவெளி, செவ்வாழைக்கு 8 அடி இடைவெளி, பூவன் மற்றும் மொந்தனுக்கு 7 அடி இடைவெளி, ரஸ்தாளிக்கு - 7 அல்லது 6 அடி இடைவெளி விட வேண்டும்.
* நடவு செய்த 3-ம் நாளில் உயிர் தண்ணீர் விட வேண்டும். அதன் பிறகு நிலத்தின் ஈரப்பதத்தைப் பொறுத்து பாசனம் செய்தால் போதுமானது.
* 15 நாட்களுக்கு ஒரு முறை மேம்படுத்தப்பட்ட அமிர்தக்கரைசலை பாசன நீரோடு கலந்துவிடலாம்.
* மாதம் ஒரு முறை ஜீவாமிர்தம் கரைசலை நீர்பாசனம் வழியாக கொடுப்பதன் மூலம் நுண்ணுயிரி பெருக்கம் அதிகரிக்கும். இதன் மூலம் அதிக மகசூல் கிடைக்கும்.
நோய் தடுக்கும் முறைகள் :
* கூன்வண்டு தாக்குதல் ஏற்பட்டால் ஒரு லிட்டர் தண்ணிரில், 100 மில்லி அக்னி அஸ்திரத்தை கலந்து வேர் பாகம் நனையும் படி ஊற்ற வேண்டும்.
* இனக்கவர்ச்சிப் பொறியை ஏக்கருக்கு 2 என்ற விகிதத்தில் வைப்பதால் இதனைக் கட்டுப்படுத்தலாம்.
* கண்ணாடி இறக்கை பூச்சி தாக்குதலுக்கு பொன்னீம் கரைசல் 20 மில்லியை, 1 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.
* தசகாவ்யா கரைசலை தெளிப்பதன் மூலம் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
* அசுவினி பூச்சி தாக்குதலுக்கு 100 லிட்டர் நீரில், இரண்டரை லிட்டர் பிரம்மாஸ்திரம், 3 லிட்டர் கோமியம் ஆகியவற்றை கலந்து 1 ஏக்கருக்கு தெளிக்கலாம். மாதம் 2 முறை தெளிப்பதன் மூலம் அசுவனி பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
* வாடல் நோய்க்கு ஒரு லிட்டர் தண்ணீருக்கு, சூடோமோனஸ் 5 கிராம் என்ற அளவில் கலந்து வயலில் லேசான ஈரம் இருக்கும் பொழுது வாழை கட்டையின் தூர் பகுதியில் ஒரு மரத்திற்கு 2 லிட்டர் வீதம் ஊற்றவேண்டும்.
* இலைக் கருகல் நோய்க்கு 1 லிட்டர் தண்ணீருக்கு, 20 மில்லி பொன்னீம் கரைசல் சேர்த்து இலையில் தெளிக்க வேண்டும்.
* கிழங்கு அழுகல் நோய்க்கு டிரைக்கோடெர்மா விரிடியை, ஒரு லிட்டர் தண்ணீருக்கு 4 கிராம் என்ற விகிதத்தில் கலந்து கன்று ஒன்றுக்கு ஒரு லிட்டர் வீதம் கன்று நன்கு நனையுமாறு ஊற்ற வேண்டும்.
கருத்துகள் இல்லை