* மரத்தின் பெயர் : டிராகன் பிளட் மரம்
* தாவரவியல் பெயர் : டிரசீனா சின்னபாரி
* ஆங்கில பெயர் : Dragon Blood Tree
* தாயகம் : இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள சுகுத்திரா சிறு தீவு
* தாவர குடும்பம் : அஸ்பராகேசியே
பொதுப்பண்புகள் :
* கடுமையான வறட்சி, கிரானைட் பாறைகளினால் ஆன மண் கண்டம் உடைய மலைப்பகுதி போன்ற இடங்களில் இந்த மரம் அதிகம் காணப்படும். பூமியிலிருந்து செங்குத்தாக வளர்ந்து பச்சை குடை போன்ற அமைப்பை இந்த மரம் பெற்றிருக்கும்.
* இந்த மரத்தை சிறிதளவு கீறினால் ரத்தச் சிவப்பாய் மரப்பால் வரும். அதனால்தான் இதன் பெயர் டிராகன் பிளட் ட்ரீ.
* பனை மரத்தைப் போல இது ஒரு விதையிலை மரம். ஆனாலும் இந்தமரத்தில் கிளைகள் இருக்கும்.
* மரத்தின் கிளையின் நுனிகளில் மட்டுமே இலைகள் தென்படும். மேலும் மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் இலைகள் முதிர்ந்து உதிரும்.
* இந்த மரம் வெள்ளை அல்லது பச்சை நிறத்தில் பூக்கும். இந்த பூக்களில் வாசனை அதிகளவில் காணப்படும். இதன் பூ கனியாகி, விலங்கினங்களுக்கு உணவாக 5 மாதங்கள் ஆகும்.
* காய்கள் கருப்பு நிறமாக காய்த்து, பின் ஆரஞ்சு கலந்த சிவப்பு நிறமாக மாறும்.
பயன்கள் :
* மரத்தின் உச்சிப்பகுதி குடைப்போல காணப்படுவதால் அதன் நிழல் அடிப்பகுதியில் நீர் ஆவியாவதைத் தடுத்து ஈரத்தை தக்க வைத்து கொள்கிறது.
* கால்நடைகளுக்கு தீவனமாகவும், கயிறு திரிக்க, பிசின் எடுக்க, தேனீப் பெட்டிகள் செய்ய, மருந்துகள் தயாரிக்க என்று பல வகைகளில் பயன்படுகிறது.
* சளி, காய்ச்சல், வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் தொண்டைப்புண், சீதபேதி போன்ற எல்லா நோய்களுக்கும் இந்த மரம் மருந்தாக பயன்படுகிறது. அதாவது இந்த மரத்தின் பிசின், வாய் மற்றும் தொண்டைப் புண்ணை குணப்படுத்தும்.
* பல் ஈறுகளில் ரத்தக் கசிவைக் கட்டுப்படுத்தவும் இந்த மரம் பயன்படுகிறது.
* இந்த மரத்தின் வேர்கள் முடக்குவாதத்தையும், இலைகள் வாயுக்களை நீக்கும்.
கருத்துகள் இல்லை