* மரத்தின் பெயர் : நெல்ரை மரம்

          * தாவரவியல் பெயர் : அக்ரோகார்பஸ் பிராகசினிபோலிஸ்

          * ஆங்கில பெயர் : Pink cedar tree

          * மண் வகை : அனைத்து வகை மண்ணிலும் வளரும் மரம்

பொதுப்பண்புகள் :

            * நெல்ரை மரம் ஒரு இலையுதிர் மரமாகும். இந்த மரத்தின் இலைகள் சிவப்பு நிறத்தில் காணப்படும்.

            * இந்த மரத்தின் மலர்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும். இதன் கனிகள் அடர் பழுப்பு நிறத்தில் இருக்கும்.

            * விதைகள் சிறியதாக, பழுப்பு நிறத்தில் இருக்கும்.

            * இந்த மரம் பொதுவாக வெப்பமண்டல பசுமை மாறா காடுகளில் வளரும்.

            * இந்த மரத்திற்கு பனியை தாங்கி வளரும் தன்மை கிடையாது.

            * நெல்ரை மரம் 35 மீ உயரம் வரை வளரக்கூடியது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 1200 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது.

            * மேலும் மலைப்பாங்கான நிலப்பகுதியில் வளரும் மரம் எனவும் குறிப்பிடலாம்.

பயன்கள் :

           * நெல்ரை மரத்தின் இலைகள் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுகிறது.

           * இந்த மரத்தில் அதிகம் பூ பூப்பதால் தேனி வளர்ப்புக்கு ஒரு சிறந்த மரமாக உள்ளது.

           * மேலும் இம்மரம் மரச்சாமன்கள், கட்டுமான பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

           * தேயிலை போன்ற பயிர்களுக்கு நிழல் தரும் மரமாக பயன்படுகிறது.

வளர்ப்பு முறைகள் :

             * நெல்ரை மரம் விதைகள் மூலமாகவே இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

             * மேலும் நாற்றங்கால் வளர்ப்பு மூலமாகவும் நடவு செய்யப்படுகிறது.

             * இந்த மரத்தின் முதிர்ந்த பழங்களில் இருந்து விதைகள் பிரித்தெடுக்கப்பட்டு நிழலில் உலர்த்தப்பட வேண்டும்.

             * பின்னர் கொதிநீரில் விதைகளை 10 நிமிடம் ஊற வைத்து, நேரடி விதைப்பில் நடவு செய்யலாம்.

             * நாற்று முறையில் நடவு செய்யும்போது, 3 x 3 செ.மீ அளவில் குழி எடுத்து, இடைவெளி 3 x 3 செ.மீ என இருக்குமாறு நடவு செய்யலாம்.

நோய் தடுக்கும் முறைகள் :

            * தினமும் பூவாளியை கொண்டு நீர் தெளிக்கலாம்.

            * நடவு செய்து 1 மாதத்திற்கு பின்பு களை எடுத்தல் வேண்டும்.

            * இந்த மரத்திற்கு அவ்வளவாக நோய் தாக்குதல் இருக்காது.

நெல்ரை மரம் பொதுப்பண்புகள் | பயன்கள் | வளர்ப்பு முறைகள் | நோய் தடுக்கும் முறைகள்

கருத்துகள் இல்லை