* மரத்தின் பெயர் : சரக்கொன்றை மரம்

           * தாவரவியல் பெயர் : கேசியா பிஸ்டுலா

           * ஆங்கில பெயர் : Golden shower, Indian laburnum Tree

           * தாயகம் : இந்திய துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசிய

           * மண் வகை : அனைத்து மண்ணிலும் வளரக்கூடிய மரம்

           * தாவர குடும்பம் : பபேசியே

           * மற்ற பெயர்கள் : கொன்றை

பொதுப்பண்புகள் :

            * 8-12 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய இயல்புடையது.

           * அகன்ற கிளைகளை உடைய இலையுதிர் மரமாகும்.

           * மரம் இளமையில் சாம்பல் நிறமாகவும், முதிர்ந்தப் பிறகு அடை சாம்பல் நிறமாக மாற்றம் அடைகிறது.

           * பூக்கள் வெளிர் மஞ்சள் நிறமுடையது.

           * கடல் மட்டத்தில் இருந்து 1220 மீ உயரமும் மலைப்பாங்கான இடத்திலும் வளரும் தன்மையைக் கொண்டது.

           * முதிர்ந்த நெற்று 30-60 செ.மீ நீளமும் 40-100 விதைகளைக் கொண்டிருக்கும்.

          * இது வறட்சி மற்றும் பனியை தாங்கி வளரும் ஒளி விரும்பி மரமாகும்.

          * 35-47 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் நன்கு வளரும்.

பயன்கள் :

            * இயற்கையாக சந்தன மரத்திற்கு ஒட்டுண்ணித் தவரமாகப் பயன்படுகிறது.

            * அலங்காரத்திற்காக வளர்க்கப்படுகிறது.

வளர்ப்பு முறைகள் :

            * சரக்கொன்றை மரத்தின் விதைகள் கொதிக்கவைத்து இறக்கப்பட்ட நீரில் 5 நிமிடம் விதை நேர்த்தி செய்யப்படுகிறது.

            * நேரடி நடவு முறை, நற்றங்கால் விதைப்பு மூலம் நடவு செய்யப்படுகிறது.

            * விதைகள் தாய் பத்தியில் நேரடியாக விதிக்கப்படுகிறது.

            * மார்ச்-ஏப்ரல் மாதம் விதைப்புக்கு ஏற்ற பருவமாகும்.

            * பாத்தியில் களைகள் வளராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

            * தினமும் பூவாளிக் கொண்டு தண்ணீர் தெளிக்க வேண்டும்.

            * நாற்று இரண்டு இலைகள் விட்ட பிறகு வளர் ஊடகம் நிரப்பபட்ட பாலீத்தின் பைகளுக்கு மாற்ற வேண்டும். 6 மாதக் கன்றுகள் நடவிற்கு ஏற்றது.

            * மழை காலங்களில் நடவு செய்யலாம்.

            * நடுவதற்கு முன்பு குழியானது நன்கு வெயிலில் உலர்த்தப்பட்டிருக்க வேண்டும்.

           * குழியின் அளவு 30 கன செ.மீ ஆக இருக்க வேண்டும்.

           * ஒவ்வொரு கன்றுகளுக்கும் 3x3 மீ மற்றும் 5x5 மீ இடைவெளி இருக்க வேண்டும்.

சரக்கொன்றை மரம் பொதுப்பண்புகள் | பயன்கள் | வளர்ப்பு முறைகள்

கருத்துகள் இல்லை