* மரத்தின் பெயர் : மாதுளை மரம்

           * தாவரவியல் பெயர் : பியுனிகா கிரனேட்டம்

           * ஆங்கில பெயர் : Pomegranate Tree

           * தாயகம் : ஈரான்

           * மண் வகை : அனைத்து மண்ணிலும் வளரும் மரங்கள்

           * தாவர குடும்பம் : லைத்திரேசியே

           * மற்ற பெயர்கள் : தாடிமம், பீசபுரம், மாதுளங்கம், மாதுளம் , கழுமுள்

பொதுப்பண்புகள் :

            * மாதுளை ஒரு சிறுமர வகையை சேர்ந்தது. இந்த மரம் 3 முதல் 5 மீட்டர் உயரம் வரை வளரும். சிம்புகளில் சிவப்பு நிறப் பூக்கள் பூக்கும்.

            * வறட்சியை தாங்கி வளரும் மரங்களில் இதுவும் ஒன்று. மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன.

            * கடல் மட்டத்திற்கு மேல் 1800 மீட்டர் உயரம் வரை உள்ள இடங்களில் மாதுளை நன்கு வளரும்.

பயன்கள் :

             * இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிடுவதன் மூலம், இதயத்திற்கும், மூளைக்கும் அதிகமான சக்தி கிடைக்கிறது. மேலும் இந்த பழத்திற்கு பித்தம் மற்றும் இருமலை குணப்படுத்தும் தன்மை உண்டு.

             * புளிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிடுவதன் மூலம் வயிற்றுக் கடுப்பு மற்றும் இரத்த பேதியை குணப்படுத்தும். மேலும் பித்தநோய் குடற்புண்களை ஆற்றுகிறது. பொதுவாக மாதுளையில் புரதம், கொழுப்பு, மாவு, தாதுப் பொருள் போன்ற சத்துகள் அடங்கியிருக்கின்றன.

            * மாதுளை நோய் தொற்றுகளிடமிருந்து நம்மை பாதுகாக்க வல்லது. அதாவது தீங்கு விளைவிக்கக்கூடிய வைரஸ்களை அழித்துவிடும் தன்மை கொண்டது.

            * மாதுளைப்பழச்சாறு எளிதில் செரிமானம் ஆகும் தன்மை கொண்டது. இதனால் உடலுக்கு புத்துணர்வு கிடைக்கிறது.

             * மாதுளம்பூக்களும் மருந்தாகப் பயன்படுகிறது. இது இரத்த வாந்தி, வயிற்றுக்கடுப்பு போன்ற நோய்களை குணமடையச் செய்யும்.

             * மேலும் மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து, வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் குணமாகும்.

             * மாதுளம் மரத்தின் பட்டையை வெட்டி, பச்சையாக இருக்கும்போது, அதன் எடையில் 8 பங்கு அளவிற்கு தண்ணீர் சேர்த்து, பாதியாகச் சுண்டக் காய்ச்சி, காலை நேரத்தில் 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் அழிந்துவிடும்.

            * மாதுளம் பூக்கள், அருகம்புல், மிளகு, சீரகம், அதிமதுரம் ஆகியவற்றை சமமாகச் சேர்த்து கஷாயம் தயாரித்து, அதை வெண்ணெயுடன் கலந்து சாப்பிட்டு வர இரத்தத்தில் ஏற்பட்ட விஷத்தன்மை நீங்கும்.

வளர்ப்பு முறைகள் :

              * மாதுளை மரத்தை மரக்கன்றுகளாகவும், விதையின் மூலமாகவும் நடவு செய்யலாம்.

              * 12 முதல் 18 மாதங்கள் ஆன மாதுளை பதியன்களை நடவு செய்யலாம் அல்லது ஆறு மாதங்களுக்கு மேல் வயதுடைய செடியின் வேர்க்குச்சிகளை நடவு செய்யலாம்.

             * 8 - 10 அடி இடைவெளியில் ஒரு அடி நீள, அகல, ஆழம் உடைய குழிகளை எடுத்து நடவு செய்ய வேண்டும்.

             * நடவு செய்த பிறகு நுண்ணுயிர் உரம், மண்புழு உரம், வேப்பம்புண்ணாக்கு மற்றும் சிறிது சுண்ணாம்பு தூள் ஆகியவற்றை கலந்து குச்சியை சுற்றி இடவேண்டும். மண் தன்மைக்கு ஏற்ப தண்ணீர் பாய்ச்சவேண்டும்.

நோய் தடுக்கும் முறைகள் :

             * மாதுளை மரத்தை அசுவினி பேன், வெள்ளை ஈ, மாவுப்பூச்சி, தத்துப்பூச்சி, பட்டைத்துளைப்பான், தண்டுத்துளைப்பான், பழத்துளைப்பான், அந்துப்பூச்சி, நூற்புழு போன்ற பல பூச்சிகள் தாக்குகின்றன.

            * மாதுளை தோட்டத்தை களைகள் இல்லாமல் சுத்தமாக வைத்திருந்தால் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.

            * இவ்வாறு செய்வதனால் பூச்சிகளின் முட்டைகள் உள்ளிட்ட பெருக்கத்தை ஏற்படுத்தும் காரணிகளை தடுத்து அழிக்கலாம்.

           * மேலும் தேவையான பூச்சிவிரட்டிகளை பயன்படுத்துவதன் மூலமும் அவற்றை கட்டுப்படுத்தலாம்.

           * முன்னதாகவே தோட்டத்தில் பூச்சிகளால் பெரும்சேதம் அடைந்த மரங்களை வெட்டி அழித்துவிட வேண்டும்.

           * வெள்ளை ஈக்களுக்கு மஞ்சள் வண்ண ஒட்டும் அட்டை வைத்து அவற்றை கவர்ந்து அழிக்க வேண்டும்.

           * மேலும் வேப்பங்கொட்டை கரைசல், மீன் அமிலம் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி இந்த வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தலாம்.

          * பட்டைத்துளைப்பான் தாக்கப்பட்ட மரத்தில் காணப்படும் துளையில் பூச்சிவிரட்டியை நிரப்பி, களிமண் கொண்டு அந்த துளையை அடைத்து விட வேண்டும்.

          * பழம் வளர்ச்சி அடையும்போது 5 சதவீதம் வேப்பங்கொட்டை சாறு தெளித்தால் பூச்சி தாக்குதல் குறைந்து நல்ல திரட்சியான பழங்களை நாம் பெற முடியும்.

மாதுளை மரம் பொதுப்பண்புகள் | பயன்கள் | வளர்ப்பு முறைகள் | நோய் தடுக்கும் முறைகள்

கருத்துகள் இல்லை