* மரத்தின் பெயர் : தென்னை மரம்
* தாவரவியல் பெயர் : கோக்கஸ் நியூசிஃபெரா
* ஆங்கில பெயர் : Coconut Tree
* தாயகம் : இந்தியா
* மண் வகை : அனைத்து மண்ணிலும் வளரும் மரங்கள்
* தாவர குடும்பம் : அரக்கேசி
பொதுப்பண்புகள் :
* தென்னை மரம் முழுமையாக செழுமை நிறைந்ததாகவே காணப்படும்.
* தென்னை மரத்தின் பட்டைகள், காய், ஓடு, நார், தண்டு என எல்லா உறுப்புகளும் பயன்படுத்தப்படுகின்றன.
* தென்னிந்தியாவில் மிக அதிகமாகத் தென்னை மரத்தைக் காணலாம். தென்னை மரம் 15-30 மீட்டர் உயரமாக வளரும்.
பயன்கள் :
* தென்னை மரத்திலிருந்து பெறப்படும் தேங்காய் உணவுப் பொருளில் பயன்படுகிறது.
* இதன் எண்ணெய் உணவுப்பொருளாகவும் எரிப்பொருளாகவும் பயன்படுகிறது.
* தேங்காயும், அதன் தண்ணீரும் ஜீரணமண்டலத்தை வலுப்படுத்த உதவுகின்றன. மேலும் நாவறட்சி, மயக்கம், படபடப்பு, இதயத்துடிப்பு அதிகரிப்பு போன்றவற்றைக் குணப்படுத்தவும் இது உதவுகிறது.
* தென்னை மரத்தின் வேரைக் கசாயமிட்டு பருகிவர படை, சொறி, தோல் நோய், நாக்கு வறட்சி போன்றவை குணமாகும்.
* இரத்தப் போக்கைக் கட்டுப்படுத்த தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்படுகின்றது.
* தேங்காயில் உள்ள பேட்டி ஆசிட் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. மேலும் உடல் எடையைக் குறைக்கிறது.
* தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ், நார்ச்சத்து அனைத்தும் தேங்காயில் உள்ளன.
* தேங்காய் எண்ணெயைத் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும்.
* தேங்காய் பால் உடல் வலிமைக்கு நல்லது மற்றும் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப்படுகிறது.
வளர்ப்பு முறைகள் :
* பொதுவாக தென்னை மரங்கள் கன்றுகளாக உற்பத்தி செய்யப்பட்டே நடவு செய்யப்படுகின்றன.
* இதன் நடவு இடைவெளி குறைந்தது இருபது அடி அதிகபட்சம் முப்பது அடி வரை ஆகும்.
* முதலில் 3x3 அளவில் அடி குழி வெட்ட வேண்டும்.
* கன்று நடுவதற்கு முன் குழியில் அரை அடி உயரத்திற்கு மண்புழு உரம் ஐந்து கிலோ, தொழு உரம் பத்து கிலோ, ஒரு கிலோ வேப்பம் புண்ணாக்கு, கால் கிலோ கிளிஞ்சல் சுண்ணாம்பு தூள் கலந்து நிரப்ப வேண்டும்.
* தென்னை சாகுபடியில் நடவுக்குழிக்கு தேவைப்பட்டால் அரைகிலோ நுண்ணூட்ட சத்து இடலாம்.
* அதன் பின்னர் கன்றில் காணப்படும் அனைத்து வேர்களையும் நீக்கி பின்பு குழியில் செங்குத்தாக வைத்து செடியை சுற்றிலும் சுமார் பத்து கிலோ ஆற்று மணல் நிரப்பி பின் மேலிருந்து அரை அடி ஆழம் இருக்குமாறு விட்டு மண் நிரப்பி விடவேண்டும்.
* மண்ணின் தன்மைக்கு ஏற்ப தண்ணீர் விட்டு பாய்ச்சி விட வேண்டும்.
நோய் தடுக்கும் முறைகள் :
* தென்னையை அதிகம் தாக்கும் நோய்கள் வாடல்நோய், காண்டாமிருக வண்டுத்தாக்குதல், சிகப்பு கூன்வண்டு தாக்குதல், சிலந்தி முதலியவை ஆகும்.
* தோப்புகளில் எக்காரணத்தைக் கொண்டும் சாணக்குவியல் மற்றும் எரு குவியல் போன்றவை இல்லாமல் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.
* கற்பூரகரைசல் மாதம் ஒரு முறை வேர் மூலம் அளிப்பதன் மூலம் வண்டு தொல்லையில் இருந்து முற்றிலும் மீளலாம். மற்ற நோய்கள் அனைத்தும் கட்டுக்குள் வந்து செலவில்லா விவசாயத்திற்கு வந்து விடலாம்.
* கோமியம் ஒரு மரத்திற்கு மாதம் ஒருமுறை ஐந்து லிட்டர் சம பங்கு தண்ணீர் உடன் கலந்து வேரில் இடுவதால் சிலந்தி தாக்குதல் கட்டுப்படுத்தப்படும். மேலும் கவர்ச்சியான காய்கள் கிடைக்கும்.
* மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல் தொடர்ந்து அளிப்பதன் மூலம் செலவில்லா சாகுபடி முறைக்கு வரலாம். அடுத்து ஒரு வருடத்தில் மரத்திற்கு 300 காய்கள் வரை பறிக்கலாம்.
* மேலும் மண்புழு உரம் அல்லது செறிவூட்டிய தொழு உரத்தை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை பத்து கிலோ ஒரு மரத்திற்கு வேரில் இடவேண்டும்.
தென்னை வளர்ப்புக் கட்டுரைகள்! - https://pachaiboomi.in/tag/coconut/
பதிலளிநீக்கு